சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"வேக்சின் இறக்குமதி".. TNMSCஐ களமிறக்கிய ஸ்டாலின்.. பிற மாநிலங்களுக்கு ரோல் மாடலாகும் தமிழக அரசு!

Google Oneindia Tamil News

சென்னை: வெளிநாடுகளிடம் இருந்து உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் மூலம் வேக்சின்களை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு எப்படி வேக்சின்களை வாங்குகிறது, எவ்வளவு விலைக்கு வாங்குகிறது, எத்தனை டோஸ்களை வாங்குகிறது என்பதன் மூலம் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக திகழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    வெளிநாட்டில் இருந்து Vaccine இறக்குமதி.. மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் வழிகாட்ட முடியும்

    உலக நாடுகளுக்கு இந்தியா வேக்சின் ஏற்றுமதி செய்தது போய்.. தற்போது இந்தியாவில் இருக்கும் மாநிலங்கள் வெளிநாடுகளிடம் இருந்து வேக்சின்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து டெண்டர் மூலம் வேக்சின்களை வாங்கும் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளது.

    4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் முதல்வர் ஸ்டாலின். இதுதான் காரணம்.. மாஸ் லீடர்! 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் முதல்வர் ஸ்டாலின். இதுதான் காரணம்.. மாஸ் லீடர்!

    ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு மிக குறைவாக வேக்சின்களை ஒதுக்கியதே இந்த அவலநிலைக்கு காரணம். அதிலும் தென்னிந்திய மாநிலங்கள், காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கும் குறைவான அளவிலேயே வேக்சின்கள் மத்திய அரசு மூலம் வேக்சின் ஒதுக்கப்பட்டது.

    வேக்சின்

    வேக்சின்

    அதிலும் தமிழகத்திற்கு வெறும் 13 லட்சம் வேக்சின்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் 8 கோடி பேர் வரை இருக்கும் நிலையில் வெறும் 13 லட்சம் டோஸ் வேக்சின் ஒதுக்கப்பட்டதால், மக்களுக்கு வேக்சின் கொடுக்க முடியாமல் தமிழக அரசு திணறி வந்தது. பலர் வேக்சின் எடுக்க ஆர்வமாக இருந்தாலும் கூட மக்களுக்கு வேக்சின் செலுத்த போதிய டோஸ்கள் இல்லாமல் அரசு திணறி வந்தது.

    வெளிநாட்டு டெண்டர்

    வெளிநாட்டு டெண்டர்

    இந்த நிலையில்தான் வெளிநாடுகளிடம் இருந்து உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் மூலம் வேக்சின்களை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதாவது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுத்து, முறையாக வெளிநாடுகளிடம் இருந்து குறைந்த விலையில், அதிகமாக வேக்சின்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    மற்ற மாநிலங்கள்

    மற்ற மாநிலங்கள்

    இதேபோல் மற்ற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளிடம் இருந்து வேக்சின் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. உத்தர பிரதேசம் இதற்காக ஏற்கனவே டெண்டர் விட்டுள்ளது. ஒடிசா, கர்நாடகா, டெல்லி, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களும் வெளிநாடுகளிடம் டெண்டர் கோரி, வேக்சின்களை வாங்க போவதாக அறிவித்துள்ளது. தற்போது தமிழகமும் இதே முடிவை எடுத்துள்ளது.

    மாற்றம்

    மாற்றம்

    இதில் பிற மாநிலங்களுக்கும் டெண்டர் எடுக்கும் முடிவில் இருந்தாலும் கூட, தமிழக அரசு இதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, எடுத்துக்காட்டாக திகழ முடியும். மற்ற மாநிலங்களை தமிழகம் வழிகாட்ட முடியும். குறைந்த விலையில் டெண்டர் கொடுத்து, அதிக டோஸ்களை வேகமாக வாங்கி தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க முடியும்.

    எடுத்துக்காட்டு

    எடுத்துக்காட்டு

    முக்கியமாக இந்தியாவில் கோவாக்சின், கோவிட்ஷீல்ட் விற்கப்படும் விலையை விட குறைந்த விலைக்கு வேக்சின்களை தமிழக அரசு வாங்கினால், மற்ற மாநிலங்களும் தமிழகத்தை பின்பற்றும். போலியோ சொட்டு மருந்து செலுத்துவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது. அப்போது ஆரம்ப சுகாதார மையங்கள் பெரிய பங்கு வகித்தன. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் இந்த வேக்சின்களை மக்களிடம் கொண்டு செல்வத்திலும் புதிய முறைகளை தமிழக அரசு மேற்கொள்ளலாம்.

    புதிய முறை

    புதிய முறை

    உதாரணமாக வீடு வீடாக வேக்சின், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேக்சின் என்று மக்களின் இருப்பிடத்திற்கே தமிழக அரசு வேக்சினை கொண்டு செல்லலாம். தமிழகத்தின் ஆரம்ப சுகாதார வசதி மூலம் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக, வேகமாக மக்களிடம் அரசு வேக்சினை கொண்டு செல்ல முடியும். அதோடு தமிழக அரசு வேக்சின் டெண்டர்களை எடுக்க TNMSC எனப்படும் Tamil Nadu Medical Services Corporation Limitedயை களமிறக்க முடிவு செய்துள்ளது.

     சிறப்பு

    சிறப்பு

    TNMSC டெண்டர் பணிகள் வெளிப்படையாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்ற மாநிலங்களை விட வேகமாக வேக்சின் பெற்று, மக்களுக்கு கொடுக்க முடியும். முக்கியமாக உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களும் கூட டெண்டர் விட்டு இருந்தாலும், வேக்சினை எல்லா மக்களுக்கும் கொண்டு செல்லும் அளவிற்கு ஆரம்ப சுகாதார மைய கட்டமைப்பு அங்கு இல்லை. அப்படி இருக்கும் போது தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு இதில் வழிகாட்ட முடியும்.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற பின் எடுக்கும் பல முடிவுகள் தேசிய அளவில் கவனம் பெறுகிறது. மற்ற மாநிலங்கள் மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதனால் தற்போது மக்களுக்கு வேக்சின் அளிப்பதிலும் முதல்வர் ஸ்டாலின் மற்ற மாநிலங்களுக்கு எடுக்கட்டாக திகழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான முதல் படியாகவே இந்த டெண்டர் அறிவிப்பும் பார்க்கப்படுகிறது.

    English summary
    Tamilnadu CM Stalin plans BIG with the Global Tender for Coronavirus Vaccine procurement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X