சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிகாலையில் திறக்கப்பட்ட மேட்டூர் அணை.. 20,000 கனஅடி நீர் வெளியேற்றம்.. வெள்ள அபாய எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தொடர் மழையை தொடர்ந்து மேட்டூர் அணை மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காலை 5 மணிக்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை ஒரு பக்கம் தீவிரம் அடைந்துள்ளது. இன்னொரு பக்கம் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் மழை தீவிரமாக பெய்து வருகிறது.

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழ்நாடு நோக்கி நகரும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

பேபி அணை மரங்களை வெட்ட தமிழகத்துக்கு உரிமை- சட்டப்படி அனுமதி தந்தோம்: கேரளா அரசுக்கு வனத்துறை பதிலடி பேபி அணை மரங்களை வெட்ட தமிழகத்துக்கு உரிமை- சட்டப்படி அனுமதி தந்தோம்: கேரளா அரசுக்கு வனத்துறை பதிலடி

தாழ்வு நிலை

தாழ்வு நிலை

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் பெரிய அளவில் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் அதி தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முக்கியமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.

மேட்டூர்

மேட்டூர்

கடந்த மூன்று நாட்களாக மேற்கு தமிழ்நாட்டிலும் கனமழை பெய்து வந்தது. சேலம், தர்மபுரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. பெங்களூரிலும் மழை பெய்து வந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தது. தொடர் மழையால் நீர் வரத்து அதிகரித்த நிலையில் அணை மதகுகள் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை 10 அடி உயர்ந்துள்ளது

 இன்று காலை

இன்று காலை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 8.00 மணியளவில் 118.32 அடியை எட்டியது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்த நிலையில் அணை திறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அளவு உயர்த்தப்பட்டது. தற்போது 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Recommended Video

    தமிழக அரசின் அலட்சியமே இந்த நிலைக்கு காரணம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
    வெள்ளம்

    வெள்ளம்

    மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 20,000 கனஅடி தண்ணீர் வெளியேறி வருவதால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu Rains: Mettur Dam opened early in the morning after heavy inflow of water.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X