சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிவர் புயல் வலுவிழந்தால் என்னவாகும்.. வலுவடைந்தால் எங்கு கரையை கடக்கும்?.. புட்டு வைத்த வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மிகவும் வேகமாக கடலோரத்தை நோக்கி வருகிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 25-ஆம் தேதி நிவர் என்ற புயல் உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் வெப்பமண்டல வானிலை ஏற்றத் தாழ்வுகள் நிலவுவதால் நம் தமிழக கடற்கரைகளில் குறைந்த காற்றழுத்தம், காற்றழுத்த தாழ்வு நிலை, புயல் ஆகியவை தவிர்க்க முடியாதது.

மழை பொழிவை தரும் வெப்பமண்டல வானிலை மாற்றமானது நமக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது நிச்சயம் ஆக்கப்பூர்வமான ஒரு புயலை உருவாக்கும். இந்த நிவர் புயல் இரு வகையான புயல்களாக மாறலாம்.

சென்னைக்கு மிக அருகே.. இன்னும் 3 நாளில்.. ஒரு பக்கம் ரெட் அலர்ட், இன்னொரு பக்கம் புயல்..கவனம் மக்களேசென்னைக்கு மிக அருகே.. இன்னும் 3 நாளில்.. ஒரு பக்கம் ரெட் அலர்ட், இன்னொரு பக்கம் புயல்..கவனம் மக்களே

வேதாரண்யம்

வேதாரண்யம்

முதலில் வலுவிழந்த புயலாக இருந்தால் அது வேதாரண்யம்- காரைக்கால் இடையே 24-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிக்குள் கரையை கடக்கும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 70 கி.மீ. ஆக இருக்கும். வேதாரண்யம்- காரைக்கால் இடையே கரையை கடக்க 20 சதவீதம் வாய்ப்புள்ளது. இதனால் திருவாரூர், நாகை, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்கள் அதீத கனமழை பெய்யும்.

டெல்டா

டெல்டா

அத போல் திருவாரூர், திருச்சி, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், கடலூர், புதுச்சேரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக அதிக கனமழையை கொடுக்கும். இந்த புயலால் டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை வரை பரவலாக மழை இருக்கும். டெல்டா மாவட்டங்களில் அதீத மழை இருக்கும்.

கரையை கடக்கும்

கரையை கடக்கும்

ஒரு வேளை இந்த நிவர் வலுவான புயலாக இருந்தால் காரைக்கால்- சென்னை இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 120-140 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். காரைக்கால்- சென்னை இடையே கரையை கடக்க 80 சதவீதம் வாய்ப்புள்ளது. இதனால் கடலூர், புதுவை, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதீத மழை பெய்யும்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு

கள்ளக்குறிச்சி, நாகை, காரைக்கால், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும். கடலூர்- புதுவை- விழுப்புரம் பகுதியில் அதீத மழை பெய்யும், காற்றின் வேகம் மணிக்கு 100 கி.மீ. ஆக இருக்கும். அது போல் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்யும்.

புயலால் டெல்டா மாவட்டங்கள்

புயலால் டெல்டா மாவட்டங்கள்

இந்த புயலால் தென் தமிழகமும், தென்மேற்கு தமிழகமும் அதாவது நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, தென்காசி, திண்டுக்கல் பகுதிகளில் மழை இருக்காது. புயலால் டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூரில் தென்னை மரங்களை வெட்டுவதாக கேள்விப்பட்டேன். இது தவறான விஷயம். காற்றின் திசை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், எனவே யாரும் மரங்களை வெட்ட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

English summary
Tamilnadu weatherman says about cyclone Nivar with 2 scenarios.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X