சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிளம்பிட்டான்யா..கிளம்பிட்டான்யா! நள்ளிரவில் கரையைக் கடந்த மாண்டஸ் புயலின் மைய பகுதி! ஆனால் முடியல!

Google Oneindia Tamil News

சென்னை : ஒன்பதாம் தேதி இரவு 9 மணி முதல் நள்ளிரவு வரை சென்னையில் ஆட்டம் காட்டிய மாண்டப் புயலில் மையப்பகுதி நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் கரையை கடந்துள்ள நிலையில் வால் பகுதி அதிகாலை வரை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்தடுத்த நாட்களில் காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது.

கடந்த எட்டாம் தேதி புயலாகவும் அதற்கடுத்து அதிதீவிர புயலாக மாறிய மாண்டச் தென்மேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் நோக்கி வந்தது.

வங்கக் கடல் டூ சென்னை! மாண்டஸ் புயல் கடந்து செல்லப் போகும் பாதை! இத்தனை விஷயங்கள் இருக்கா? வங்கக் கடல் டூ சென்னை! மாண்டஸ் புயல் கடந்து செல்லப் போகும் பாதை! இத்தனை விஷயங்கள் இருக்கா?

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல்

மணிக்கு 10 முதல் 14 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பயணித்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மிக அதிக கனமழையும் வேலூர் ராணிப்பேட்டை கடலூர் நாகை திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதுமட்டும் இல்லாமல் திண்டுக்கல், தேனி, மதுரை சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்தது.

புயல் பாதிப்பு

புயல் பாதிப்பு

இந்நிலையில் அதி தீவிர புயலில் இருந்து புயலாக மாறிய மேண்டஸ் ஒன்பதாம் தேதி இரவு ஒன்பது மணிக்கு கரையை கடக்கத் தொடங்கியது. மணிக்கு 50 கிலோமீட்டரில் இருந்து 65 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசியதோடு சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது இதனால் பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்த நிலையில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக பட்டினப்பாக்கம் காசிமேடு ஆகிய பகுதிகளில் புயலின் கோரத்தாண்டவத்திற்கு படகுகள் சேதம் அடைந்ததோடு குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்தது.

புயலின் தீவிரம்

புயலின் தீவிரம்

இதைஅடுத்து மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து அடுத்தடுத்து புயலின் தீவிரம் காரணமாக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர மற்றவர்கள் மாற்று வழி பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

கரையை கடந்தது

கரையை கடந்தது

தொடர்ந்து சென்னையை நெருங்கி வந்த புயல் மாமல்லபுரம் அருகே இரண்டு மணிக்கு மேல் கரையை கடந்தது. புயலின் மையப்பகுதி கரையை கடந்த போது காற்று மழை இல்லாமல் அமைதியாக இருந்த நிலையில் அடுத்து வால் பகுதி கரையை கடக்க தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக அதிகாலை வரை பலத்த காற்று மற்றும் கனமழை இருக்கும் எனவும் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நான்கு மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் எனவும் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

ஊழியர்கள் தீவிரம்

ஊழியர்கள் தீவிரம்

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில் உடனடியாக அவை அகற்றப்பட்டது. இரவு முழுவதும் சுமார் ஒன்பதாயிரம் பணியாளர்கள் புயல் காரணமாக விழுந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தினர். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆணையர் கெகன் தீப் சிங் பேடி ஆகியோர் இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டதோடு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் காலையில் தான் புயலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத நிலவரங்கள் தெரியவரும் எனவும் இருந்த போதும் இரவுக்குள் முடிந்த அளவு மீட்பு பணிகள் முடிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

English summary
The Meteorological Department has announced that the center of Cyclone Mantap, which hit Chennai from 9 pm to midnight on the 9th, will cross the coast after 2 am and the tail will cross till early morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X