ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியுள்ளன.. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,219 மையங்களில் சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வெழுதி வரும் நிலையில், சென்னை மடிப்பாக்கத்தில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரது கண்களையும் குளமாக்கியுள்ளது.. என்ன நடந்தது?
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் உள்ள பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருபவர் 15 வயது சிறுவன் சாய் கார்த்திக்.. வழக்கமான துடிப்புடன் பள்ளிக்கு சென்று வந்த இந்த மாணவனின் வாழ்வில் எதிர்பாராத ஒரு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி விட்டது..

ஆம், தன்னுடைய வீட்டின் மாடியில் இருந்து கீழே இறங்கும்போது நிலைதடுமாறி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த சாய் கார்த்திக்கிற்கு, முதுகெலும்பில் அதாவது பைனல் கார்டில் பலத்த காயம் ஏற்பட்டது.. இந்த விபத்தின் காரணமாக அவரால் எழுந்து உட்காரவோ அல்லது நடக்கவோ முடியாத சூழல் உருவானது..
டாக்டர்களின் தீவிர சிகிச்சையில் இருந்தபோதிலும், நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாகவே இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் மாணவர்..
சென்னை 10ம் வகுப்பு மாணவன்
இந்த நேரத்தில்தான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கிவிட்டது.. வாழ்க்கையின் மிக முக்கியமான தேர்வு நடைபெற உள்ள நிலையில், உடல்நிலை ஒத்துழைக்காதது அந்த மாணவனையும் அவரது குடும்பத்தினரையும் மிகுந்த கவலையில் ஆழ்த்தியது.. இருந்தாலும், தனது ஓராண்டு உழைப்பு வீணாகிவிடக்கூடாது என்பதில் சாய் கார்த்திக் உறுதியாக இருந்தார்..
படுத்த படுக்கையாக இருந்தாலும் தேர்வினை எழுதியே தீருவேன் என்ற அவரது தன்னம்பிக்கை, பள்ளிக்கல்வித்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.. மாணவனின் நிலையை கருத்தில் கொண்டு, அவர் ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு மையத்திற்கு வந்து தேர்வ எழுத பள்ளிக்கல்வித்துறை சிறப்பு அனுமதியை வழங்கியது..
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே
இன்று காலை தமிழ் பாடத்திற்கான முதல் தேர்வு தொடங்கியபோது, மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது.. அங்கிருந்து ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்கப்பட்ட நிலையில் சாய் கார்த்திக் தேர்வு ரூமுக்குள் கொண்டு வரப்பட்டார்..
முதுகெலும்பு பாதிப்பால் அவரால் பேனாவைப் பிடித்து எழுத முடியாத நிலை இருந்ததால், அவருக்கு உதவியாக வேறொரு பள்ளியில் இருந்து ஒரு ஆசிரியை வரவழைக்கப்பட்டிருந்தார்.. தேர்வு அறையில் படுத்தபடியே சாய் கார்த்திக் விடைகளைச் சொல்லச் சொல்ல, அந்த ஆசிரியை அதனை விடைத்தாளில் எழுதினார்.. வலியை பொறுத்துக்கொண்டு கல்வியின் மேன்மையை உலகுக்கு உணர்த்திய அந்த மாணவனின் செயல் அங்கிருந்த ஆசிரியர்களையும் சக மாணவர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
விடாமுயற்சி - சபாஷ்
தமிழகம் முழுவதும் இன்று 9,09,002 பேர் தேர்வு எழுதி வரும் நிலையில், 25,801 தனித்தேர்வர்களும் 395 சிறைக்கைதிகளும் இந்த பட்டியலில் அடங்குவர்.. இவர்களுக்கிடையில், மரண வலியைத் தாங்கிக்கொண்டு ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சாய் கார்த்திக் காட்டிய இந்த உறுதி, எத்தகைய சவால்களையும் தன்னம்பிக்கையால் வெல்ல முடியும் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது..
உடல்நலம் குன்றிய நிலையிலும், கல்வியின் மீது கொண்ட தீராத தாகத்தால் ஒரு மாணவர் காட்டிய மன உறுதி, இன்றைய தேர்வு நாளின் மிக முக்கியமான செய்தியாக மாறியுள்ளது.. அதுமட்டுமல்ல, மே 20-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், சாய் கார்த்திக்கின் இந்த விடாமுயற்சிக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்..!!!
-
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications