Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடுநிலை வேண்டாம்ணே.. சைலண்ட் ஆன ‘மாஜிக்கள்’! அதிரடியாய் காய் நகர்த்தும் ஓபிஎஸ்! ஷாக்கான எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை ஊடகங்களிலும் பொதுவெளிகளிலும் ஆவேசமாக பேசி வந்த பல முன்னாள் அமைச்சர்கள் தற்போது நடுநிலை என்ற பெயரில் அமைதி காத்து வரும் நிலையில் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், அவர்களை தங்கள் தரப்புக்கு இழுக்கும் முயற்சியில் ஓபிஎஸ் தரப்பும் ஈடுபட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை பொதுவெளியில் முதன்முறையாக போட்டு உடைத்தவர் அதிமுக முன்னாள் அமைச்சரும் சென்னையைச் சேர்ந்த முக்கிய தலைவருமான ஜெயக்குமார்.

அவர்தான் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முடித்துக் கொண்டு வெளியே வந்தவுடன் ஊடகங்களிடம் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது என பேசினார்.

ஒற்றைத் தலைமை

ஒற்றைத் தலைமை

அப்போது ஆரம்பித்தது தான் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம். அன்று மாலையே ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள வீட்டில் ஆலோசனை நடத்திய நிலையில் மறுபுறம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஒற்றை தலைமை விவகாரம் முதல் பொதுக்குழு கூட்டம் வரை ஓபிஎஸ் தரப்பில் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், ஜேசிடி பிரபாகர், தர்மர், தேனி சையது கான், கன்னியாகுமரி அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது அவர்கள் எடுத்த நிலைப்பாட்டில் தான் தற்போது வரை தொடர்வதாக கூறுகின்றனர் தேனி அதிமுகவினர்.

அமைதி காக்கும் மாஜிக்கள்

அமைதி காக்கும் மாஜிக்கள்

அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அப்போதைக்கு மிக ஆவேசமாக பேசியவர்களில் கேபி முனுசாமி. ஜெயக்குமார். வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், புதுக்கோட்டை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், நாமக்கல் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், விழுப்புரம் சிவி சண்முகம், ஈரோடு செங்கோட்டையன், கருப்பண்ணன், பொன்னையன், கேசி வீரமணி, சரோஜா, உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் முக்கியமானவர்கள். இந்நிலையில் தான் இவர்களில் பலர் கடந்த சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கூட தலைகாட்டாமல் அமைதி காத்து வருகின்றனர்.

முக்குலத்தோர் செல்வாக்கு

முக்குலத்தோர் செல்வாக்கு

அதிமுகவில் ஓபிஎஸ் நீக்கம் காரணமாக முக்குலத்தோர் செல்வாக்கு சரியும் வாய்ப்பு இருப்பதாக கருதிய எடப்பாடி பழனிச்சாமி அதற்காக அதனை ஈடு செய்யும் வகையில் முக்குலத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு அதிக அளவில் பதவிகளை அளித்தார். அந்த வகையில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு பொருளாளர் பதவியும், கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதனுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியும், மதுரையைச் சேர்ந்த ஆர் பி உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. கொங்கு நிர்வாகிகளை பொருத்தவரை தலைமைக் கழக நிர்வாகிகள் பதவிகளில் வேலுமணிக்கு மட்டுமே தலைமை நிலைய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மற்ற பிற நிர்வாகிகளுக்கு அமைப்பு செயலாளர் பதவியே வழங்கப்பட்டது.

திடீர் அமைதி

திடீர் அமைதி

இதன் காரணமாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெரும்பாலான நிர்வாகிகள் திடீர் அமைதி காத்தனர். குறிப்பாக முட்டை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், போர்வை தயாரிக்கும் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், மருத்துவராக இருக்கும் ஒரு முன்னாள் அமைச்சர் தற்போது வரை ஆழ்ந்த தியானத்தில் இருப்பது போல அமைதி காத்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே பொதுக்குழுக்கு முன்னால் எடப்பாடி பழனிச்சாமிக்கு தீவிர ஆதரவாக பேசியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்களில் பலர் ஓபிஎஸ் தரப்புக்கு சென்று விடலாமா என யோசிப்பதோடு எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஆதரவாக பேசுவதை நிறுத்திவிட்டனர்.

நடுநிலை காப்போம்

நடுநிலை காப்போம்

வேறு சிலரோ யாருக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டாம் கடைசிவரை நடப்பதை மட்டும் வேடிக்கை பார்ப்போம் என்று ரீதியில் தற்போது அமைதியாக இருக்கின்றனர். இந்நிலையில் அதிமுகவில் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமானால் நடுநிலை காப்பதெல்லாம் சரியாக இருக்காது ஒன்று எங்களோடு வந்து விடுங்கள் அல்லது அவருக்கே ஆதரவு தெரிவியுங்கள் என வெளிப்படையாகவே ஓபிஎஸ் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இன்னலையில் முதலில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் நிர்வாகிகள் ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்த நிலையில் தற்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் அளவுக்கு வந்துவிட்டதா என்பதை அறிந்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் அதிர்ச்சியில் இருக்கிறது.

உற்சாகம்

உற்சாகம்

ஏற்கனவே ஒரு எம்எல்ஏ சென்றுவிட்ட நிலையில் எம்எல்ஏக்களை காத்துக் கொள்வதா? அல்லது மாவட்ட செயலாளர்களை காத்துக் கொள்வதா? என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறது எடப்பாடி தரப்பு. இதனை அறிந்து உற்சாகத்தில் இருக்கும் ஓபிஎஸ் சரப்பு தங்கள் தரப்பு காய் நகர்த்தல்களை மிகவும் சாதுர்யமாக மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் நாட்களில் அதிமுக விவகாரம் இன்னும் தீவிரமாக இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+