சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இடிக்குதே".. எப்ப பார்த்தாலும் குறை.. இதுதான் காரணம்.. பாஜகவின் "பாயிண்ட்டை" பிடித்த விஜய் வசந்த்

விஜய் வசந்த், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜகவில் பல்வேறு சலசலப்புகள் நிலவிவரும் நிலையில், காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.. அத்துடன், தமிழகத்தில் பாஜக எந்த காலத்திலும் வளர வாய்ப்பில்லை என்றும் ஆணித்தரமாக சொல்லியுள்ளார்.

இத்தனை நாட்களும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் மட்டுமே நிலவி வந்த பூசல்கள், பாஜகவிலும் தொற்றிக் கொண்டுவிட்டது.. சமீபகாலமாவே நிறைய சர்ச்சைகள் அந்த கட்சியில் உலா வருகின்றன.

தொடர்ந்து பலர், திடீர் திடீர் என கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் வருகிறார்கள்.. அந்தவகையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் இன்னமும் ஆவேசம் அடங்காமல் உள்ளார்..

கன்ஃபார்ம்.. 25 டூ 39.. சட்டுனு கணக்கை மாற்றிய அண்ணாமலை.. “கூட்டணி”? சொன்ன வார்த்தையை கவனிச்சீங்களா?கன்ஃபார்ம்.. 25 டூ 39.. சட்டுனு கணக்கை மாற்றிய அண்ணாமலை.. “கூட்டணி”? சொன்ன வார்த்தையை கவனிச்சீங்களா?

கதறல்

கதறல்

அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டி இருந்தது, மேலிட பாஜகவரை பறந்து சென்றதாக தெரிகிறது.. அத்துடன் தமிழக பாஜகவில் இந்த புகாரானது, பரபரப்பை ஏற்படுத்தியது.. அண்ணாமலையுடன் ஒரு நேர்காணலை நடத்த விரும்புகிறேன். அவர் வெளியே வந்து என்னை எதிர்கொள்வாரா? உண்மையைச் சொல்லுங்கள்.. உண்மையை உலகம் அறியட்டும் என்று கதறி கேட்டுக் கொண்டே இருக்கிறார் காயத்ரி.. இதையடுத்து, பல்வேறு விமர்சனங்களையும் அதிருப்தியாளர்கள் அண்ணாமலை மீது வைத்து வருகிறார்கள்..

 ஆதாரம் எங்கே

ஆதாரம் எங்கே

மற்றொருபக்கம், அண்ணாமலையால் கட்சிக்குள் நிறைய குழப்பங்கள் சுற்றி வருவதாக சொல்லப்படுகிறது.. சீனியர்களை அண்ணாமலை மதிக்காமல், ஓரங்கட்டுகிறார் என்றும், சொந்த கட்சியில் இருந்தே அழுத்தங்களும், புகார்களும் டெல்லிக்கு பறந்து கொண்டிருக்கின்றன. இதற்கு நடுவில் திமுக அரசு மீது, நாள்தவறாமல் புகார்களை அண்ணாமலை அண்ணாமலை சொல்லி வருவதால், திமுக கடுப்பாகிவும் உள்ளது.. அந்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆதாரம் எங்கே? இதுவரை ஒரு குற்றச்சாட்டையாவது அண்ணாமலை நிரூபித்திருக்கிறாரா என்று திமுக தரப்பில் கேள்விகள் எழுகின்றன..

அநாகரீகம்

அநாகரீகம்

ஆனால், அண்ணாமலையே, மீடியாக்களையே கேள்வி கேட்டு திணறடித்து வருகிறார்.. தன்னிடம் யார் என்ன கேள்வி கேட்டாலும், அந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றால், உடனே அந்த பத்திரிக்கையாளரின் பெயர் என்ன, அவர் பணியாற்றும் நிறுவனத்தின் பெயர் என்ன? என்று பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே கேட்டுவிடுவதை அண்ணாமலை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்... கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் அதை கேட்கும் பத்திரிக்கையாளருக்கு மறைமுக மிரட்டல் விடுப்பது போல் கேட்பது அநாகரீகத்தின் உச்சம் என்று புலம்புகிறார்கள் சில செய்தியாளர்கள்.

 சான்ஸே இல்லை

சான்ஸே இல்லை

இப்படிப்பட்ட சூழலில், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் ஒரு டிவி சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொல்லும்போது, "தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று சமீபகாலமாகவே நிறைய விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.. இந்த விமர்சனங்களை திசைதிருப்பவே, அண்ணாமலை ஊடகங்களை மீது குறை சொல்கிறார்.. கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், ஊடக நண்பர்களை குறை சொல்வதையே வாடிக்கையாகவும் வைத்திருக்கிறார்... இதையெல்லாம் பார்த்தால், பாஜக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டை, அவர் ஒப்புக்கொள்வது போலத்தான் தோன்றுகிறது.. எனவே, தமிழகத்தில் எந்த காலத்திலும், பெரிய கட்சியாக பாஜக உருவாக வாய்ப்பில்லை" என்று கருத்து கூறியுள்ளார்.

English summary
There is no chance of BJP becoming a major party in Tamil Nadu, says MP Vijay Vasanth
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X