திருமாவளவனின் “மெகா அஸ்திரம்”.. “மோடி என்கிற கேள்வி” என்ற பெயரில் தமிழில் பிபிசி ஆவணப்படம் வெளியீடு
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னையில் தமிழில் வெளியிட்டார்.
சென்னை: குஜராத் கலவரத்தின் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீடு இருப்பதாக கூறி பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்து இருக்கும் நிலையில் அதை, "இந்தியா: மோடி என்கிற கேள்வி" என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
குஜராத்தில் கடந்த 2002 ல் நடைபெற்ற மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டு ஏராளமானோர் படுகாயமடைந்தனர். பலர் மாயமானது, ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது இந்த மத வன்முறை தொடர்பாக பிரிட்டன் அரசின் விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளியிட்டது. அதை வைத்து ஆங்கில தொலைக்காட்சியான பிபிசி, "இந்தியா: தி மோடி குவெஸ்டீன்" என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது.

மத்திய அரசு விதித்த தடை
அதில், குஜராத் கலவரத்தின் பின்னணியில் பிரதமர் மோடியின் பங்கு இருப்பதாக கூறப்பட்டது பாஜகவினரை கொந்தளிப்படைய செய்தது. மத்திய அரசு 2 பாகமாக வெளியாகி உள்ள இந்த ஆவணப் படத்திற்கு தடை விதித்தது. இதன் காரணமாக யூடியூப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்படவில்லை.

தடையை மீறி திரையிடல்
இந்த ஆவணப்படத்திற்கு வெளிநாடுகளில் தடை விதிக்கப்படாததால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மற்றும் பிற நாட்டாவர்கள் அதை பார்த்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பிபிசியின் இந்த ஆவணப்படம் பகிரப்பட்டு வருகிறது. இதனை அடுத்து நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆவணப்படம் பார்க்கும் போராட்டங்கள் நடைபெற்றன.

மாணவர்கள் ஆர்வம்
சென்னை பல்கலைக்கழகம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் போன்றவற்றில் இந்த ஆவணப்படத்தை பார்க்கும் போராட்டத்தில் மாணவர் அமைப்பினர் ஈடுபட்டனர். இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. அதே நேரம் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஏராளமானார் இதை திரையிட்டு பார்த்தனர்.

சென்னை கவுன்சிலர் கைது
அதேபோல் DYFI அமைப்பு சென்னையில் இந்த ஆவணப்படம் பார்க்கும் போராட்டத்தை நடத்தியது. இதில் சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெண் கவுன்சிலர் கலந்துகொண்டதற்காக கைது செய்யப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டியக்கம் என்ற அமைப்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த ஆவணப்படத்தை போலீஸ் அனுமதியுடன் திரையிட்டனர்.

நாகை காங்கிரஸ் - பாஜக மோதல்
அதேபோல் நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் அலுவலகம் முன் பிபிசியின் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதனை அறிந்து அங்கு வந்த பாஜகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனை அறிந்து அங்கு வந்த போலீசார் மோதலை தடுத்து நிறுத்தி பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் ஆவணப்படம் திரையிடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

தமிழில் வெளியிட்ட திருமாவளவன்
இந்த நிலையில் இந்த ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்த்தி திரையிடப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். அந்த வகையில் இன்று சென்னையில் "இந்தியா: மோடி என்கிற கேள்வி" என்ற பெயரில் தமிழில் பிபிசி ஆவணப்படத்தை திருமாவளவன் வெளியிட்டார்.
-
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்!











Click it and Unblock the Notifications