சனாதன கும்பலுக்கு சேவை செய்யும் போலி தமிழ்த் தேசியவாதிகள்.. சீமான் மீது திருமா மறைமுக அட்டாக்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார். சனாதன கும்பல், ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்கு சேவை செய்யும் போலி தமிழ்த் தேசியவாதிகள் என்றும் விமர்சித்து பேசியிருக்கிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவள்வன் கூறியிருப்பதாவது:- சனாதனத்திற்கு துணை போகின்ற கும்பல், ஆர்.எஸ்.எஸ், பாஜக அரசியலை உயர்த்தி பிடிக்கும் கும்பல், போலி தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு இந்திய தேசியத்துக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் வடவர் ஆதிக்கத்தை விமர்சிக்காமல், இந்தி திணிப்பை எதிர்க்காமல், சனாதன திணிப்பை எதிர்க்காமல், மதவெறியினை எதிர்க்காமல் வெறுமனே, அண்டை மாநிலங்களை சேர்ந்த தேசிய இனங்களை பகைவர்களாக காட்டுகிற முயற்சியில் ஒரு திரிபுவாத தேசியவாதத்தை பேசுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் தேசியத்திற்கு ஒரு தெலுங்கரோ, மலையாளிகளோ, கன்னடர்களோ. முதன்மையான எதிரியாக இருக்க முடியாது. தமிழ்நாட்டில் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் போராடிய தலைவர்களை தமிழர் அல்லாதவர் என்று அடையாளம் காட்டி..
அவர்களை தெலுங்கு எதிர்ப்பாளராகவும், மலையாளி எதிர்ப்பாளராகவும், கன்னட எதிர்ப்பாளராகவும் மாற்றி சனாதன கும்பலுக்கு சேவை செய்து வருகிற போலி தமிழ்த் தேசியவாதிகளை தமிழகத்துக்கு அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.
நாம் தமிழ் தேசியத்தை உயர்த்தி பிடித்த போது, இவர்கள் எங்கே இருந்தார்கள், யாருக்கு வேலை செய்தார்கள், என்ன வேலை செய்து கொண்டு இருந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. எதோ இன்று நாம் போட்டியாக யாருக்கோ ஒரு போட்டி என்கிற அடிப்படையில் அறிவித்ததாக சிலர் பிதற்றிக்கொள்கிறார்கள்..
புலம்பெயர்த நாடுகளில் வாழும் நம் தழிழர்களும் இந்த சதியை அறியாமல் நாம் ஏதோ அண்ணன் பிரபாகரனுக்கு எதிராக இருக்கிறோம் என்ற ஒரு கருத்தை உருவாக்குகிறார்கள். இது ஒரு தவறான புரிதல். அண்ணன் அவர்கள் என் மீது கொண்ட மதிப்பு, நம்பிக்கை அபாரமானது. அவர் மீது நான் வைத்திருக்கின்ற பற்று விவரிக்க முடியாது. என்று கூறினார்.
-
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
ஒரே ஒரு தோட்டா.. காட்டி விடுவேன் டாட்டா.. சமூக விரோதிகளுக்கு சீமான் வார்னிங் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?











Click it and Unblock the Notifications