1 நாள் அவகாசம்.. “கத்துக்கிட்டு வரலனா அம்பலப்படுத்துவேன்!" சுமந்த் ராமனை ரவுண்டு கட்டிய பிடிஆர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக அரசின் கடன் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என வலதுசாரி ஆதரவாளர் சுமந்த் சி ராமன் தெரிவித்து இருப்பதற்கு தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். "குறைவான அறிவு இருப்பது ஒரு ஆபத்தான விஷயம் என்பதன் சுருக்கமாக சுமந்த் சி ராமன் இருக்கிறார்" என விமர்சித்துள்ளார் அமைச்சர் பிடிஆர்.

மேலும், பற்றாக்குறை, கடன், நிதியாண்டு, உண்மை நிலை ஆகியவை குறித்து உளறுவதற்கு முன்பாக அறிந்திருக்க வேண்டிய அடிப்படைகளைக் கண்டறிய அவருக்கு ஒரு நாள் அவகாசம் வழங்குவோம் என்றும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சுமந்த் சி ராமன் தன்னைத் திருத்திக் கொள்ளாவிட்டால், அவருடைய அறியாமையை அம்பலப்படுத்த ஒரு பிரஸ் ஸ்டேட்மென்ட்டை வெளியிடுவேன் என நிதியமைச்சர் பிடிஆர் எச்சரித்துள்ளார்.

அமைச்சர் பிடிஆர்

அமைச்சர் பிடிஆர்

தமிழக அமைச்சரவையில் சமீபத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் வழங்கப்பட்டதோடு, 10 அமைச்சர்களின் இலாக்காக்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் நிதித்துறை பொறுப்போடு கூடுதலாக அவருக்கு புள்ளியியல் துறையும் வழங்கப்பட்டது. புள்ளியியல் துறையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அனுபவமும் ஆர்வமும் கொண்டவர் என்பதால் அவருக்கு அந்தத் துறை கூடுதலாக வழங்கப்பட்டது.

சுமந்த் சி ராமன் ட்வீட்

சுமந்த் சி ராமன் ட்வீட்

இந்த நிலையில் அரசியல் விமர்சகரும், வலதுசாரி ஆதரவாளருமான சுமந்த் சி ராமன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு பரபரப்பைக் கிளப்பியது. அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 2022-2023 நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2021-2022 நிதியாண்டில் வாங்கிய ரூ.87,000 கோடியை விட ரூ.13,000 கோடி அதிகம். மாநில அரசின் கடன் மொத்தமாக ரூ.6.5 லட்சம் கோடிக்கு மேல் இருக்கலாம்.

கோமாவுக்கு போய்ட்டாங்க

கோமாவுக்கு போய்ட்டாங்க

முந்தைய அரசு எப்படி மாநிலத்தை கடனில் தள்ளியது, ஒவ்வொரு தமிழ்நாட்டு குடும்பத்தின் மீதும் 2.63 லட்சம் கடன் இருந்தது எப்படி என்பது பற்றி ஊடகங்கள் விவாதம் செய்தது எனக்கு நினைவிருக்கிறது. தற்போது அனைவரும் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுவிட்டனர். மாநில அரசின் கடன் சுமார் ரூ. 5 லட்சம் கோடியாக இருந்தபோது, பொறுப்பற்ற முறையில் கடன் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இப்போது கடன் ரூ. 6 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும்போது மாநில அரசு பொருளாதாரத்தை நன்றாக நிர்வகிக்கிறதா? என்று பதிவிட்டிருந்தார்.

குறைவான அறிவு ஆபத்தானது

குறைவான அறிவு ஆபத்தானது

இதற்கு பதில் அளிக்கும் விதமாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், 'குறைவான அறிவு இருப்பது ஒரு ஆபத்தான விஷயம் என்பதன் சுருக்கமாக சுமந்த் சி ராமன் இருக்கிறார். பற்றாக்குறை, கடன், நிதியாண்டு, உண்மை நிலை ஆகியவை குறித்து உளறுவதற்கு முன்பாக அறிந்திருக்க வேண்டிய அடிப்படைகளைக் கண்டறிய அவருக்கு ஒரு நாள் அவகாசம் வழங்குவோம்.

ஒரு நாள் அவகாசம்

ஒரு நாள் அவகாசம்

சுமந்த் சி ராமன் தன்னைத் திருத்திக் கொள்ளாவிட்டால், அவருடைய அறியாமையை அம்பலப்படுத்த ஒரு பிரஸ் ரிலீஸை வெளியிடுவேன்' என்று பதிவிட்டுள்ளார் பிடிஆர். மாநில அரசின் கடன் தொடர்பாக சுமந்த் சி ராமன் பதிவிட்டதற்கு 1 நாள் கெடு விதித்துள்ள நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இந்த ட்வீட் அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+