சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரி மகன் பேச்சு-ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரும் பாஜக நாராயணன்
சென்னை: சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்கிற மனுஸ்மிருதியை மேற்கோள்காட்டி பேசிய திமுக மூத்த தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான ஆ.ராசா மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தி உள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆ.ராசா வழக்கம் போல இந்துத்துவா எதிர்ப்பு கருத்துகளை பேசினார். அதில் மனுஸ்மிருதி சூத்திரர்கள் பற்றி எழுதி இருப்பதை ஆ.ராசா சுட்டிக்காட்டி பேசினார். இந்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆ.ராசாவுக்கு எதிராக வலதுசாரிகள் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தமது வலைதளப் பக்கத்தில் எழுதி இருப்பதாவது: 'ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது' என்று தி மு க வின் துணை பொது செயலாளர் ஆ.ராசா பேசுகின்ற ஒரு காட்சியை பார்க்க நேர்ந்தது.

ஸ்டாலின் கருத்து
இதை எப்போது பேசியிருந்தாலும் வன்மத்தை தூண்டுகிற மத துவேஷ பேச்சே. "எங்கள் கட்சியில் இருப்பவர்கள் 90 விழுக்காடு ஹிந்துக்கள் தான், அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஹிந்து மதத்தின் மீதும் கடவுளின் மீதும் நம்பிக்கை உள்ளது"என்றும் சில ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல் நேரத்தில் தி மு க தலைவர் திரு.மு.க,ஸ்டாலின் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஹிந்து மத நம்பிக்கை
தி மு க தொண்டர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்ல, திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் குறிப்பாக, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உட்பட பலரும் கடவுள் மீதும், ஹிந்து மதத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளதோடு தொடர்ந்து பல கோவில்களுக்கு சென்று வழிபடுவதையும் நாம் பார்த்து வருகிறோம்.

சிறையில் அடைப்பாரா?
மு க ஸ்டாலின் அவர்களுக்கு நம் ஒரே கேள்வி - அ.ராசாவின் கேள்விகள் பொதுமக்களுக்கானது என்றால், மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது மத துவேஷத்தை யார் செய்தாலும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அ.ராசாவை கைது செய்து சிறையிலடைக்க உரிய நடவடிக்கை எடுத்து தான் சொன்னதை, தன் கடமையை செய்வாரா?

கட்சியை விட்டு நீக்குவாரா?
விடுதலை மற்றும் முரசொலியை குறிப்பிட்டு பேசியுள்ளதால், அ.ராசாவின் கேள்விகள் தி மு க தொண்டர்களின் குடும்பத்தினருக்கும், தி மு க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினருக்கும் என்றால், சொந்த கட்சி தொண்டர்களின் குடும்பத்தினர் மற்றும் தலைவரின் குடும்பத்தினரை இழிவுபடுத்தியதற்கு, தி மு கவிலிருந்து நீக்குவாரா? பொது மக்களா? குடும்பமா? எதுவாகினும் உரிய நடவடிக்கை எடுப்பாரா திரு.
@mkstalin அவர்கள்?. இவ்வாறு நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்? -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications