இரட்டை இலை வேண்டாம்.. குக்கர் சின்னமே போதும்.. அமித்ஷாவிடம் சொல்லிவிட்ட டிடிவி தினகரன்!
டெல்லி: மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் குக்கர் சின்னத்திலேயே அமமுக வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்பதை டிடிவி தினகரன் அழுத்தமாக சொல்லியதாக தெரிய வந்துள்ளது. அதிக தொகுதிகள் பெறுவதில் டிடிவி தினகரன் பெரிய ஆர்வம் காட்டவில்லை என்றாலும், இரட்டை இலை சின்னம் வேண்டாம் என்று டிடிவி தினகரன் தீர்க்கமாக முடிவு எடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நிறைவு செய்யும் முடிவில் அமித்ஷா இருக்கிறார். இதற்காக நேற்று முன்தினம் அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிலேயே எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா இடையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்று இறுதி முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் எடப்பாடி பழனிசாமி முக்கியமான ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளை தவிர்த்து ஏனைய கூட்டணி கட்சிகள் அனைத்தும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும்.. அப்படி இரட்டை இலை அதிக தொகுதிகளில் போட்டியிட்டால், அதிமுக வெற்றி உறுதியாகும் என்று கூறி இருக்கிறார். இதனால் அமித்ஷாவும் சம்மதம் கூறி இருக்கிறார்.
இதன்பின் நேற்றே டிடிவி தினகரன் டெல்லி சென்றாலும், இன்று மதியம் தான் அமித்ஷாவை சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது அமமுகவுக்கு 8 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என்று அமித்ஷா தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல் டிடிவி தினகரனும் அதிக தொகுதிகளை பெறும் எண்ணத்தில் இல்லை என்று சொல்லப்படுகிறது.
ஆனால் அமித்ஷா அமமுக வேட்பாளர்களும் இரட்டை இலை சின்னத்தில் நிற்கலாமே என்று ஆலோசனை செய்திருக்கிறார். ஆனால் டிடிவி தினகரன், தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் என்று எதுவும் தேவையில்லை.. ஆனால் அமமுக வேட்பாளர்கள் குக்கர் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அழுத்தமாக கூறி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அமமுகவுக்கு வழங்கப்படும் தொகுதிகள் பெரும்பாலானவை தென் மாவட்டங்களில் தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆண்டிப்பட்டி தொகுதியில் அமமுக கட்டாயம் போட்டியிடும் என்று டிடிவி தினகரன் கூறி இருந்தார். இது தவிர்த்து தேனி மாவட்டத்தில் சில தொகுதிகளும், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் சில தொகுதிகளும் ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
-
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
பாலில் விழுந்த மாம்பழம்.. அன்புமணி கைக்கு மொத்தமாய் போன பாமக! வலை போட்டு வேட்பாளர்களை தேடும் அய்யா! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம் -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
பிரதமர் மோடியின் முரட்டு அடிமை.. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின் -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம்












Click it and Unblock the Notifications