சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகம் டாங்கிகள் தயாரிப்பிலும் மையமாக திகழுகிறது: பிரதமர் மோடி புகழாரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் டாங்கி நமது தேசத்தின் வடக்கு எல்லையை பாதுகாக்க போகிறது என்பது நமது ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது; தமிழகம் டாங்கிகள் தயாரிப்பு மையமாக திகழ்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

Recommended Video

    சென்னை: புதிய அர்ஜூன் மாக் 1A டாங்... ராணுவத்திற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

    சென்னையில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: சென்னை மெட்ரோவின் 9 கி.மீ நீள, முதல் கட்ட விரிவாக்க திட்டத்தை நாம் தொடங்கியுள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை மெட்ரோ வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது மற்றும் நமது தற்சார்பு இந்தியா கனவை நனவாக்க உதவுகிறது

    TN evolving tank manufacturing hub of India, says PM Modi

    மெட்ரோ திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட், ஒரு நகரத்திற்கு ஒரே சமயத்தில் ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய திட்டமாகும். சென்னை மற்றும் தமிழகத்தில் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதை இந்தத் திட்டம் ஊக்குவிக்கும். மேம்படுத்தப்பட்ட இணைப்பு, வசதியையும், வர்த்தகத்தையும் கொண்டு வருகிறது. 228 கி.மீ வழித்தடம், உணவு தானியங்களை விரைவாக கொண்டு செல்வதை உறுதி செய்யும்

    தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட போர் ஊர்திகள், நமது நாட்டை பாதுகாக்க வடக்கு எல்லையில் பயன்படுத்தப்படும். இது நமது நாட்டின் ஒற்றுமை தத்துவத்தை காட்டுகிறது. இது பாதுகாப்புத்துறையில் நமது நமது நாட்டை தற்சார்புடையதாக்கும். வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு இப்போது டாங்கிகள் தயாரிப்பு மையமாக உருவாகி உள்ளது.

    உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக தமிழக விவசாயிகளை பாராட்டுகிறேன். இந்த கல்லணை , நமது புகழ்பெற்ற பழங்காலத்தின் ஆதாரமாக உள்ளது

    கோவையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும்...குட் நியூஸ் சொன்ன எடப்பாடி பழனிசாமி! கோவையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும்...குட் நியூஸ் சொன்ன எடப்பாடி பழனிசாமி!

    2 பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்களில் ஒன்று தமிழகத்தில் உள்ளது. இந்த வழித்தடம் ரூ.8,100 கோடி முதலீட்டை பெற்றுள்ளது. புல்வாமா தாக்குதலை எந்த இந்தியராலும் மறக்க இயலாது. நமது பாதுகாப்புப் படையினரை எண்ணி நாம் பெருமை கொள்கிறோம். அவர்களது வீரம் நம் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து ஆற்றலை வழங்கும்.

    உலக தரத்திலான ஆராய்ச்சி மையம் அமைக்க, சென்னை ஐஐடி-ன் டிஸ்கவரி வளாகத்தில், 2 லட்சம் சதுர அடி பரப்பில் உள் கட்டமைப்பு உருவாக்கப்படும். இந்த ஆராய்ச்சி மையம், முன்னணி கண்டுபிடிப்பு மையமாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    English summary
    PM Modi said that Tamil Nadu is already a leading automobile manufacturing hub of India. Now, I see, Tamil Nadu evolving as the tank manufacturing hub of India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X