Just In
நடிகை சித்ரா தற்கொலை வழக்கு- ஹேம்நாத்துக்கு ஹைகோர்ட் நிபந்தனை ஜாமீன்
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை: நடிகை சித்ரா தற்கொலை வழக்கு…ஹேம்நாத்திற்கு ஜாமீன் கிடைத்தது எப்படி?!
நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிம்பர் 9-ந் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணைகளின் முடிவில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து தமக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேம்நாத் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான அடுத்தடுத்த விசாரணைகளில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஹேம்நாத் மதுரையில் தங்கி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.