நான் வருவேன்.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. சுணங்கி கிடந்த தவெக தலைகளுக்கு.. சர்ப்ரைஸ் தகவல்!
சென்னை: பெரம்பூர் தொகுதிக்கு நான் வருவேன்.... என்ற விஜயின் வார்த்தையால் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார்கள் பெரம்பூர் தொகுதி தவெக தொண்டர்கள். உண்மையில் பெரம்பூர் தொகுதியை விஜய் டிக் அடித்துள்ளாரா?... அப்படி பெரம்பூர் தொகுதியில் விஜய் நின்றால் வெற்றி பெற வாய்ப்புள்ளதா என்பதை பற்றிய விவாதம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள, சென்னை மாநராட்சியின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய பெரம்பூர் தொகுதி மிகவும் பாரம்பரியமான தொகுதி. படித்தவர்கள் அதிகம் உள்ள வேலை வாய்ப்பு நிறைய உள்ள முக்கியமான தொகுதி. இந்த தொகுதி கிட்டத்தட்ட திமுகவின் கோட்டையாகவே உள்ளது. 1952 முதல் பெரம்பூரில் நடைபெற்றுள்ள 17 தேர்தல்களில் (2019 இடைத் தேர்தல் உள்பட) 9 முறை திமுகவும், 3 முறை மா.கம்யூனிஸ்ட்டும், 2 முறை அதிகவும் வெற்றி பெற்றுள்ளன.

விஜய் பெரம்பூர் தொகுதி
அந்த அளவிற்கு திமுகவிற்கு சாதகமான தொகுதியாகவே இருக்கிறது திமுக. படித்தவர்களுக்கு இணையாக தொழிலாளர்களும் நிறைந்துள்ள பகுதி இது. இப்படி திமுகவிற்கு சாதகமான அம்சங்கள் நிறைந்த பெரம்பூர் தொகுதியை உண்மையிலேயே விஜய் தேர்ந்தெடுத்துள்ளாரா? அப்படி தேர்வு செய்துள்ளார் என்றால் அவரின் வெற்றி வாய்ப்பு எப்படி என்பது குறித்த விவாதம் தான் இப்போது லைம்லைட்டில் இருக்கிறது.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி 23ம் தேதி நடைபெற்ற பெரம்பூர் தொகுதி தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதை உண்மையாக்கும் வகையில் தற்போது நான் பெரம்பூருக்கு வருவேன் என விஜயே பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒருவேளை விஜய் பெரம்பூரில் போட்டியிட்டால் வெற்றி பெறுவாரா என்ற கேள்வியை முன்வைத்தால் அதற்கு வாய்ப்பு இருப்பதாகவே பதில்கள் கிடைக்கின்றன.
பெரம்பூர் தொகுதி தவெக செயல்வீரர்கள் கூட்டம்
ஏனென்றால் பெரம்பூர் தொகுதியில் இருக்கும் இளையோர் வாக்குகள். பெரம்பூர் தொகுதியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முக்கியமான அம்சங்களுள் ஒன்று இளையோர் வாக்குகள். இந்த தொகுதியில் 18 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் கணிசமாக இருக்கிறார்கள். அவர்களது முதல் சாய்ஸ் விஜய் தான் என்கிறார்கள். நம்மிடம் பேசிய அதிமுக அனுதாபியான இளைஞர் ஒருவர், தன் குடும்பத்தில் உள்ளவர்களே விஜய்க்கு வாக்களிக்குமாறு தன்னிடம் கேன்வாஸ் செய்கிறார்கள் என்றார். மேலும், பெரம்பூர் தொகுதியில் நிறுத்த அதிமுகவில் ஸ்ட்ராங்கான கேண்டிடேட் இல்லை. இதுவும் விஜய்க்கு சாதகம் தான். அதிமுக வேட்பாளர் சரியான தேர்வாக அமையாத பட்சத்தில் அதிமுக ஓட்டுகள் விஜய் பக்கம் திரும்ப வாய்ப்பு உள்ளது.
முதலில் பெரம்பூர் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பெரம்பூர் தொகுதிக்கு யாரிடமும் விருப்பமனு வாங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர் போன்ற வடசென்னை தொகுதி ஒன்றில் விஜய் போட்டியிடும் எண்ணத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தான் பனையூரில் நடைபெற்ற நேர்காணலுக்கு வந்தவர்களிடம் பெரம்பூர் தொகுதிக்கு நான் வருவேன் என விஜய் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரச்சாரத்திற்கு வருகிறரா? போட்டியிடப் வருகிறாரா என்பது வெகு விரைவில் தெரியும் என்கிறார்கள் தவெக தொண்டர்கள்.
- சிறப்பு நிருபர்
-
சென்னையில் 13 தொகுதிகளில் 'திமுக' வெல்லும் ! - வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா! என்னங்க நடக்குது? -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
விஜயை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது! சின்ன வயசுல இருந்தே எனக்கு தெரியும்.. ஒய் ஜி மகேந்திரன் ஓபன் -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள் -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
நீட் பயிற்சி மையத்திற்கு ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொன்னது பொய்யா? -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை!












Click it and Unblock the Notifications