Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில் ஸ்டாலின்! சேலத்தில் அமித்ஷா! விஜய் பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை! தவெக அருண்ராஜ் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள் என அக்கட்சியின் நிர்வாகியும் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியுமான அருண்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வேலூரில் விஜய் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்தோம்.

ஆனால் நாங்கள் அனுமதி கடிதம் கொடுத்த பிறகு முதல்வர் நிகழ்ச்சி வேலூரில் நடப்பதாக சொல்கிறார்கள். அதனால் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இது ஜனநாயகத்திற்கு எதிரானது.

TVK Arunraj

அடுத்து சேலத்தில் வரும் 13 ஆம் தேதி விஜய் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். அனுமதி கடிதம் கொடுத்துள்ளோம். தற்போது அங்கு அமித்ஷா வர இருப்பதாக சொல்கிறார்கள், திமுக பாஜகவுக்கு என்ன உறவு இருக்கிறதோ என தெரியவில்லை. இவ்வாறு அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

அதுபோல் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் அருண்ராஜ் கூறியிருப்பதாவது: அலைகடலெனத் திரண்ட அன்புத் தொண்டர்கள்: மாற்றத்தின் சங்கொலி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான வேட்பாளர் விருப்ப மனு விநியோகம் இன்று எழுச்சியுடன் தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் அலைகடலென திரண்டு வந்து விருப்ப மனுக்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

இது வெறும் காகிதங்களுக்கான படிவம் அல்ல; தமிழக மக்களின் கனவுகளைத் தாங்கிப் பிடிக்கப் போகும் ஒரு புதிய மாற்றத்திற்கான உறுதிமொழிப் பத்திரம்! தமிழக அரசியலில் ஒரு பெரும் மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்பதற்குச் சாட்சியாக, த.வெ.க-வின் இந்தத் தேர்தல் களம் இப்போதே சரித்திரம் படைக்கத் தொடங்கிவிட்டது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அருண்ராஜ் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. அவரும் அந்த தொகுதியில் போட்டியிட விரும்புகிறார் என்கிறார்கள்.

தவெகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வரும் அருண்ராஜ், திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அண்மையில் கூட மதுரை அருகே அதிமுக பிரமுகர் கொலையுண்டது குறித்தும் விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: தலை துண்டிக்கும் கொடூரம்... துருப்பிடித்த இரும்புக்கரத்தை காயலான் கடையில் போடுங்கள் @mkstalin சார்.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் தனது டீக்கடை முன்பு மது அருந்தியவர்களை தட்டிக் கேட்ட அதிமுக பிரமுகர் செந்தில் என்பவர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு இருளில் மூழ்கி கிடக்கிறது. ஆனால், காவல்துறையின் அமைச்சரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மட்டும் எந்த கவலையும் இல்லாமல் கலர் கலராக ரீல் சுத்தி கொண்டிருக்கிறார்.

மது அருந்துவதை தட்டிக் கேட்டால் கொலை, கஞ்சா விற்பனை குறித்து புகார் கொடுத்தால் கொலை என போதை கும்பலின் மிதமிஞ்சிய அட்டூழியமும், அராஜகமும் புரையோடிப் போய்விட்டது. திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிகளும், போதை மாஃபியாக்களும் சுதந்திரம் பறவைகளாக, அச்சம் இல்லாமல் குற்றம் செய்யத் துணிகிறார்கள்.

திமுக ஆட்சிக்கு எதிராக யாராவது சோஷியல் மீடியாவில் கருத்து சொன்னால் மட்டும் தான் காவல்துறைக்கு புத்துணர்ச்சி வந்து விடும் போல.! மற்ற நேரமெல்லாம் கண்ணை மூடி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடுகிறது.

தினம் தினம் கொலை சம்பவங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர், தான் கையில் வைத்திருப்பதாக கூறிக் கொள்ளும் அந்த துருப்பிடித்த இரும்புக் கரத்தை இனிமேல் கீழே தூக்கிப் போடுவதே நல்லது.! தமிழ்நாட்டு மக்கள் சற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+