ஆட்சியைப் பிடித்த பிறகு பட்ஜெட் பற்றி கருத்து சொல்கிறோம்! செங்கோட்டையன் அடடே
திருப்பூர்: கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தவெக செங்கோட்டையன், பட்ஜெட் குறித்து விஜய் கருத்து கூறாததற்கு விளக்கம் அளித்தார். மேலும் கரூர் விஷயத்தில் எடப்பாடி விஜய்க்கு ஆதரவு கொடுக்காவிட்டால் அந்த கட்சி இருந்திருக்கவே இருக்காது என்ற அதிமுகவினர் குற்றச்சாட்டுக்கும் பதில் அளித்துள்ளார். செங்கோட்டையன் பேசியதாவது:-
கரூர் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி மட்டும் குரல் கொடுக்காமல் இருந்திருந்தால் அந்த கட்சியே காணாமல் போயிருக்கும் என்று எஸ்பி வேலுமணி கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி என்ன சிபிஐ அதிகாரியா.. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. விஜய் நேரில் ஆஜராகி இருமுறை விளக்கம் அளித்து இருக்கிறார். இவர் சொல்வதனால் விசாரணை நின்றுவிடுமா?

பிள்ளையார் சுழி போட்டாச்சுன்னு சொன்னது யார்
கொடி பறக்குது.. பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள்.. பெரிய கட்சி கூட்டணிக்கு வருகிறது என்றெல்லாம் யார் பேசினார்கள்.. அது எல்லாம் மறந்துவிட்டார்களா?.. கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி.. கூட்டணிக்கு வரவில்லை என்றவுடன் இப்போ இப்படி பேசுகிறார்கள்..
திண்டுக்கல் சீனிவாசன் எப்படிப்பட்டவர் என்று உங்களுக்கு தெரியும். வாயில் வருவதை அள்ளிவிடக்கூடாது. வார்த்தைகளை அள்ளிவிடுவது எளிது. ஊழல் செய்திருந்தால் அதனை நிரூபிக்க சொல்லுங்கள். அவங்க எல்லாரும் யாரிடம் அடிமையாக இருந்து வெளியே வந்திருக்காங்க என்று எல்லாருக்கும் தெரியும்.
எஸ்பி வேலுமணி ஆடவில்லையா?
தலைவராக இருக்கவே தகுதியில்லை என்று கூறிய விமர்சனத்துக்கு பதில் அளித்த செங்கோட்டையன், தலைவராக யார் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். அவர்கள் பிறகு எதற்கு தேர்தல்களில் தோற்றார்கள்.. முருகன் பக்தி பாடல் பாடினார். சால்வை போட்டு விஜய் ஆடினார். நயினார் நாகேந்திரன் ஆடவில்லையா?
ஏன் எஸ்பி வேலுமணி சலங்கை கட்டி ஆடவில்லையா? யார் ஆடாமல் இருக்கிறார்கள்.. ஆடிக்கொண்டு இருப்பவரே ஆட வேண்டாம் என்று சொல்கிறார்.. ஆனால் ஆடாக்கூடாதவர்கள் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். யாரும் புண்படும்படியான கருத்துக்கள் இல்லை. பாடகர் வேல்முருகன் பாடல் யார் மனதையும் புண்படுத்தவில்லை.
பட்ஜெட் குறித்து பதில் சொல்லுவோம்
எங்களுடன் கூட்டணிக்கு யார் வருவார்கள் என்பதை இப்போது சொல்ல முடியாது. அதனை தலைவர் சொல்வார். யார் யார் கூட்டணிக்கு வருவார்கள் என்றும், தனித்து போட்டியா என்பது குறித்தும் விஜய் முடிவு செய்வார். அடுத்த கூட்டம் எப்போது நடைபெறும் என்பதை 2 நாளில் அறிவிப்போம்.
பட்ஜெட் குறித்து இப்போது ஏதும் சொல்ல முடியாது. நாங்க வளர்ந்து வருகிற கட்சி. ஆட்சிக்கு வந்த பிறகு பட்ஜெட் குறித்து சொல்லுவோம்.. 2026 தேர்தலுக்கு பிறகு எந்த கட்சிக்கு பாதிப்பு என்பது என தெரியும். வெளிநாட்டில் இருந்து 3 லட்சம் பேர் தவெகவுக்கு வந்து ஓட்டு போட இருக்கிறார்கள். மவுனம் வெற்றிக்கு அறிகுறி. என்று பேசினார்.
-
அண்ணாமலை பெயரும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருக்கு.. மையக்குழு கூட்டத்துக்கு பின் உறுதி செய்த நயினார்! -
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.200௦! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம் -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
காட்டுமன்னார்கோவிலுக்கு கிளம்பும் திருமாவளவன்.. டெல்லி துறப்பு முடிவின் பின்னணி இதுதானா? விசிக பலே -
ஒரு சதுர அடி வெறும் ரூ.4.5.. மொத்தம் 25 ஏக்கர்! சீமான் தன் மனைவிக்கு வாங்கிய சொத்து! இடிக்குதே! -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி












Click it and Unblock the Notifications