சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

‘ஒன்றியம்’ : திமுகவினரும் ஏன் கடுப்பாகுறாங்க..? - கட்டம் கட்ட மா.செக்கள் போடும் திட்டம் என குமுறல்!

Google Oneindia Tamil News

சென்னை : திமுகவில் பல மாவட்டங்களில் ஒன்றியங்கள் பலவாறாகப் பிரிக்கப்பட்டு, தங்களது அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருப்பது ஒன்றிய செயலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கட்சி ரீதியில் ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு புதிய ஒன்றியங்கள் ஏற்படுத்தப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார்.

ஒன்றியங்கள் பிரிப்பு விவரம் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் அண்மையில் வெளியாகியிருந்தது.

 புதிய கல்வி கொள்கை..திமுக அரசையும் பாஜகவையும் ஒன்றாக கோர்த்துவிட்டு சரமாரி கேள்வி கேட்கும் சீமான்! புதிய கல்வி கொள்கை..திமுக அரசையும் பாஜகவையும் ஒன்றாக கோர்த்துவிட்டு சரமாரி கேள்வி கேட்கும் சீமான்!

திமுக

திமுக

தி.மு.கவில் கிராமங்களில் கிளைச் செயலாளர்கள், ஒன்றியங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்குத் தனித்தனியாக செயலாளர்கள், மாநகராட்சிகளில் வார்டுக்கு ஒரு செயலாளர் என்ற அடிப்படையில் நிர்வாகிகள் பதவி வகிக்கின்றனர். அதிகமான நிர்வாகிகளுக்கு பதவிகள் கொடுக்கவும், கட்சியின் செயல்பாட்டை மேம்படுத்தவும் கட்சி தலைமையே பல மாவட்டங்களையும், ஒன்றியங்களையும் வசதிக்கு ஏற்றார்போல் பிரித்து புதிய பொறுப்பாளர்களை நியமித்து வருகிறது.

பல மாவட்டங்களில்

பல மாவட்டங்களில்

திமுக தனது நிர்வாக வசதிக்காக வருவாய் மாவட்டங்களை 2 முதல் 3 ஆக ஏற்கெனவே பிரித்துள்ளது. இதேபோல் அந்தந்த மாவட்டங்களிலுள்ள ஒன்றியங்களையும் பிரித்து கட்சி நிர்வாகிகளை நியமித்துள்ளது. மதுரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒன்றியங்கள் பிரிக்கப்படாமல் இருந்தன. இதுகுறித்த பட்டியலை மாவட்டச் செயலாளர்கள் கட்சித் தலைமைக்கு அனுப்பி பல மாதங்களாகியும் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது பல மாவட்டங்களில் ஒன்றியங்களைப் பிரித்து திமுக தலைமை அறிவித்துள்ளது.

 துரைமுருகன் அறிவிப்பு

துரைமுருகன் அறிவிப்பு

நிர்வாக வசதிக்காகவும், கட்சிப்பணிகள் செவ்வனே நடைபெறவும் ஒன்றியங்கள் பிரிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஒன்றியங்கள் பிரிப்பு விவரம் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் அண்மையில் வெளியானது. தி.மு.கவில் மாவட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இருக்கும் ஒன்றியங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு வருவதால் மாவட்டங்கள் குறைய வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

6ல் இருந்து 15

6ல் இருந்து 15

மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தில் திமுக 6 ஒன்றியங்களாகச் செயல்படுகிறது. இவற்றை பிரித்து 15 ஆக மாற்றியுள்ளது திமுக தலைமை. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்டத்தில் ஏற்கெனவே இருந்த 11 ஒன்றியங்கள் 15 ஆக பிரிக்கப்பட்டுள்ளன. விருதுநகர் வடக்கு மாவட்ட திமுகவில் 2 ஒன்றியங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதேபோல், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கட்சிரீதியாக ஒன்றியங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒரு ஒன்றியத்துக்கு 10 ஊராட்சிகளே

ஒரு ஒன்றியத்துக்கு 10 ஊராட்சிகளே

இதற்கு முன் ஒரு ஒன்றியத்தில் 40 ஊராட்சிகள் வரை இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு ஒன்றியமும் பலவாறாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் தற்போது 10 முதல் 20 கிராம ஊராட்சிகளே உள்ளன. இதனால் ஒன்றிய செயலாளர்களின் அதிகாரம் குறுகியுள்ளது. ஒன்றிய செயலாளர்கள் பலர் கட்சி போராட்டங்கள், கூட்டங்கள் என நிறைய செலவு செய்து அடுத்த எம்.எல்.ஏ தேர்தலில் சீட் வாங்க கணக்கு போட்டுவரும் நிலையில் தலைமையின் இந்த அறிவிப்பு அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மா.செக்கள் திட்டம்

மா.செக்கள் திட்டம்

மாவட்ட செயலாளர்கள் தங்களுக்கு ஒத்துவராத ஒன்றிய செயலாளர்கள் பொறுப்பு வகிக்கும் ஒன்றியத்தை திட்டமிட்டு மூன்றாகப் பிரித்துள்ளதாகவும் ஒன்றிய செயலாளர்கள் சிலர் புகார் வாசிக்கின்றனர். தங்களுக்கு வேண்டியவர்களை ஒன்றிய செயலாளர்களாக நியமிப்பதற்காகவே இவ்வாறு செய்கின்றனர். தலைமை களத்தில் விசாரித்து முடிவு எடுத்திருக்க வேண்டும் என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

English summary
DMK splits unions in several districts : திமுகவில் பல மாவட்டங்களில் ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு, சிறிதாக்கப்பட்டு இருப்பது ஒன்றிய செயலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X