• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மதுரையின் பொக்கிஷம் மறைந்தது".. பிரபல ஓவியர் மனோகர் தேவதாஸ் காலமானார்

Google Oneindia Tamil News

சென்னை: பிரபல ஓவியரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மனோகர் தேவதாஸ் (86) நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 86. அவருக்கு இறுதி சடங்குகள் சென்னை சாந்தோமில் உள்ள மகளின் வீட்டில் இன்று நடைபெறுகிறது.

பாரம்பரிய கட்டடங்களை வரையும் ஆற்றல் மிகு கலைஞராக அறியப்படுபவர் மனோகர் தேவதாஸ். இவர் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அவர் நேற்று அதிகாலை காலமானார். இவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மதுரை எம்பி சு வெங்கடேசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். கடந்த 1938 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் மனோகர் தேவதாஸ். இவர் 30 வயதில் ரெட்டினிஸ் பிக்மென்டோசா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இவர் நினைத்திருந்தால்.. குஜராத் முடிவே மாறியிருக்கும்! ஒதுங்கி நின்ற கிங் மேக்கர்.. யார் இந்த நரேஷ்?இவர் நினைத்திருந்தால்.. குஜராத் முடிவே மாறியிருக்கும்! ஒதுங்கி நின்ற கிங் மேக்கர்.. யார் இந்த நரேஷ்?

83 வயதில்

83 வயதில்

83 வயதில் முழு பார்வை திறனையும் இழந்தார். எனினும் பாரம்பரிய கட்டடங்களை வரையும் தனது கலைப் பணியை தொடர்ந்து வந்தார். மேலும் கிரீன் வெல் இயர்ஸ், மல்டி ஃபேக்ட்ஸ் ஆஃப் மை மதுரை, நிறங்களின் மொழி, டிரீம்ஸ் போன்ற பல நூல்களையும் எழுதியுள்ளார்.

மஹிமா பெயரில் நிறுவப்பட்ட தொண்டு நிறுவனம்

மஹிமா பெயரில் நிறுவப்பட்ட தொண்டு நிறுவனம்

இவர் கடந்த 2008ஆம் ஆண்டு மனைவி மஹிமா பெயரில் நிறுவப்பட்ட தொண்டு நிறுவனம் மூலம் கிராம மக்களின் கண் சிகிச்சைக்கு உதவி வந்தார். இவருக்கு 2020 ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து மதுரை சு வெங்கடேசன் தனது இரங்கல் பதிவில் வாழ்க்கை கண்ணொளியை பறித்து இருளில் தள்ளிய பொழுதும் தனது ஓவியத்தின் மூலம் புது உலகை படைத்துக்காட்டி தன்னம்பிக்கையின் ஒளியாய் சுடர்விட்ட மகாகலைஞன் மனோகர் தேவதாஸ் காலமானார்.

பொக்கிஷம் மறைந்தது

பொக்கிஷம் மறைந்தது

மதுரையின் பொக்கிஷம் மறைந்தது. கண்ணீர் சிந்துவது உங்களுக்கு பிடிக்காது. ஆனால் இந்த வரியை எழுதும் பொழுது வழிந்தோடும் கண்ணீரை அடக்க முடியவில்லை. மன்னியுங்கள் மனோ ஆழ்ந்த இரங்கல் என சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மனோகர் தேவதாஸ் எழுதிய Green Well years என்ற புத்தகத்தில் வடக்கு மாசி வீதியை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்.

வடக்கு மாசி வீதி

வடக்கு மாசி வீதி

மனோகர் தேவதாஸ் மதுரை வடக்கு மாசி வீதியில் பிறந்தவர். பள்ளிக் கல்வியை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். கல்லூரி படிப்பை அமெரிக்கன் கல்லூரியில் தொடர்ந்தார். 1950, 1960 களில் வடக்கு மாசி வீதியில் தனது சித்திரங்களின் மூலமாகவும் சொற்களின் மூலமாகவும் அழைத்து சென்றார் மனோகர் தேவதாஸ். சலங்கையின் சங்கீதம் என்ற சித்திரத்தில் வடக்கு மாசி வீதி பேச்சியம்மன் கோயில் தெரு சந்திப்பு இடம் பெற்றிருக்கும்.

பேச்சியம்மன் கோயில்

பேச்சியம்மன் கோயில்

பேச்சியம்மன் கோயில் தெருவில் மாடுகள் வைகை ஆற்றை நோக்கி செல்வதை போன்ற சித்திரம் அது. அந்த சித்திரத்தில் இருக்கும் வீடுகள் இப்போதும் இருக்கின்றன. 'பார்த்தாலே பரவசம்' என்ற ஓவியத்தில், ஒரு வீட்டின் பால்கனியிலிருந்து ஒரு இளம் பெண் வீதியில் செல்லும் இளைஞனைப் பார்க்கிறாள். பின்னணியில் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம். இந்த வீடு எங்கேயிருக்கிறது என மதுரைக்காரர்களை யோசிக்க வைக்கும்.

குணப்படுத்த முடியாத நோய்

குணப்படுத்த முடியாத நோய்

மனோகர் தேவதாஸை ரெட்டினைட்டிஸ் பிக்மன்டோஸா என்ற கண் நோய் தாக்கியது. அவரது கண் பார்வையை சிறிது சிறிதாக இல்லாமல் ஆக்கியது. இரண்டுமே மருத்துவத்தால் சரிசெய்ய முடியாத எல்லைகள். அதற்குப் பிறகு அதீத காதலுடன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைதான் காவியம்.

English summary
Very Famous drawing artist Manohar Devadoss passed away.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X