Vijay: கோட்சூட்டில் விஜய்.. பார்த்ததும் ஜெகன் மோகன் ரெட்டி செய்த செயல்.. சென்னையில் சுவாரசியம்
சென்னை: ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் விஜயும் இன்று சென்னையில் சந்தித்து பேசி கொண்டனர். அரசியலில் உடை முதல் பேச்சு வரை ஜெகன்மோகன் ரெட்டியை விஜய் பாலோ செய்வதாக கூறப்படும் நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் இணையதளத்தில் வெளியாகி பரவி வருகின்றன.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். இவரது உறவினர் சுனில் ரெட்டி. இவரது மகன் சாஹிலின் திருமணம் சென்னையில் நடந்தது. அவர் வேதிகா என்பவரை கரம் பிடித்தார்.

இந்த விழாவில் ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்றார். இந்த திருமண விழாவில் தமிழகத்தின் அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
கோட்சூட்டில் விஜய்
அந்த வகையில் இன்று மாலை நேரத்தில் சென்னை தனியார் விடுதியில் சாஹில் - வேதிகா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் பங்கேற்றார். நடிகர் விஜய் கோட்சூட் அணிந்து விழாவுக்கு சென்றார். ஜெகன்மோகன் ரெட்டி பார்த்ததும், விஜயிடம் கைக்கொடுத்து வரவேற்றார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர்.
இருவரும் திருமண ஜோடியுடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டனர். இருவருக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு விஜயும், ஜெகன்மோகன் ரெட்டியும் அருகருகே இருக்கையில் அமர்ந்து கொண்டு சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர். பின்னர் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
தேர்தலுக்கு நடுவே..
விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை எடுத்து கொண்டால் தெலுங்கு பேசும் மக்கள் குறிப்பிடும்படியாக வாழ்கின்றனர். இப்படியான சூழலில் ஜெகன்மோகன் ரெட்டியுடன் நடந்த இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஜெகன்மோகன் ஸ்டைலில் விஜய்
ஜெகன் மோகன் ரெட்டி எப்போதுமே வெள்ளை நிற சட்டை, சேண்டல் நிற பேண்ட் அணியும் வழக்கத்தை கொண்டுள்ளார். விஜயும் அரசியல் கட்சி தொடங்கியது முதல் வெள்ளை நிற சட்டை, சேண்டல் நிற பேண்ட் அணிவதை வாடிக்கையாக்கி உள்ளார்.
மேலும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தான் தேர்தல் வியூகங்களை முதலில் வகுத்து கொடுத்தது. அதில், ஜான் ஆரோக்கியசாமி இடம்பெற்றிருந்தார். தற்போது விஜய்க்கும் ஜான் ஆரோக்கியசாமி தான் தேர்தல் வியூக ஆலோசகராக உள்ளார். இதனால் ஜெகன்மோகன் ரெட்டி ஸ்டைலை விஜய் பின்பற்றுவதாக ஏற்கனவே விவாதங்கள் கிளம்பியது.
ஸ்டாலின் - ஜெகன்மோகன் ரெட்டி
இப்போது விஜயும், ஜெகன்மோகன் ரெட்டியும் திருமண விழாவில் சந்தித்த போட்டோ வெளியாகி சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. முன்னதாக இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவரையும் ஜெகன்மோகன் ரெட்டி வரவேற்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின் மணமக்களுக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்தியதோடு, சிறிது நேரம் ஜெகன் மோகன் ரெட்டியுடன் உரையாடினார். அதேபோல் நடிகர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி உள்ளிட்டவர்களும் விழாவில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Vijay Affidavit: குடும்பத்திற்கே கடன் கொடுத்த ஒருவரை பார்த்ததே இல்லை! விஜய் மீது முத்தரசன் தாக்கு! -
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
திருத்தணியில் தவெக வேட்பாளருக்கு வந்த தனிமை கொடுமை.. விஜய் கட்சியில் தெறித்து ஓடும் நிர்வாகிகள்? -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
விஜய் வேட்பு மனு பெரம்பூரில் தள்ளுபடி செய்யப்படுமா? சட்ட ரீதியாக விஜய்க்கு உள்ள வாய்ப்பு என்ன? -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்? -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
திருப்பரங்குன்றம் தொகுதியில் சிடிஆர் நிர்மல்குமார்.. அதிருப்தியில் தவெக! பின்னணியில் ராஜன் செல்லப்பா












Click it and Unblock the Notifications