நீர் மேலாண்மையில் நாட்டிலேயே தமிழகத்திற்கு 3வது இடம்.. நெகிழ்ந்த துரைமுருகன்.. முதல்வருடன் சந்திப்பு
சென்னை: நீர் மேலாண்மையில் இந்திய அளவில் தமிழகத்திற்கு 3வது இடம் கிடைத்துள்ளதையடுத்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முதல்வர் மு.க .ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பான செயல்பாடு குறித்து இத்துறையின் சிறப்புக் குழு மாநிலவாரியாக கள ஆய்வு மேற்கொள்கிறது.
சிறப்பாக செயல்பட்ட மாநிலத்துக்கு 3 விருதுகளும், சிறந்த மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து, டெல்லியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் 3வது இடம்
அந்த வகையில், கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலை ஜல்சக்தித் துறை வெளியிட்டது. இதில், உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தையும், ராஜஸ்தான் 2-வது இடத்தையும், தமிழகம் 3-வது இடத்தையும் பெற்றுள்ளன. சிறந்த கிராம பஞ்சாயத்துக்கான விருதுகளில் தென்மண்டல அளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெள்ளப்புதூர் ஊராட்சி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

விருது பட்டியல்
சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரிவில் மதுரை மாநகராட்சி 3-வது இடத்தையும், சிறந்த பள்ளிகள் பிரிவில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல் இடத்தையும் பிடித்துள்ளன. சிறந்த தொழில் பிரிவில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் 2-ம் இடத்தையும், சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா 2-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

முதல்வரை சந்தித்த துரைமுருகன்
இந்நிலையில், விருது அறிவிக்கப்பட்ட தகவலை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது, நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், பள்ளிக்கல்வித் துறைகள்,தொண்டு நிறுவனங்கள், தொழில்துறை ஆகியவற்றை சேர்ந்த அனைத்து அலுவலர்களுக்கும் தனது பாராட்டுகளையும், வாழ்த்து களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு விருதுகள்
தேசிய நீர் மேலாண்மை விருது மட்டுமல்லாது தமிழகத்திற்கு இந்த வருடம் தொடர்ந்து பல விருதுகள் கிடைத்திருக்கிறது. உதாரணத்திற்கு சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலம், தூய்மை நகரங்களுக்கான விருது ,தூய்மை இந்தியா திட்ட விருது, உள்ளிட்ட பல்வேறு விருதுகளை கடந்த மாதத்திலும், இந்த மாதத்தில் தமிழகம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications