சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடாது துரத்தும் மழை.. சென்னையின் அடுத்த 6 நாள் நிலவரம் இதுதாங்க.. என்ன ஒரே மேகமூட்டமாகவே இருக்கு?

Google Oneindia Tamil News

சென்னை: மாண்டாஸ் புயல் கரையை கடந்த நிலையில் இன்று முதல் டிசம்பர் 16ம் தேதி வரை 7 நாளுக்கான முன்கூட்டிய வானிலை நிலவரத்தை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலால் தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த புயல் நேற்று இரவு 9.30 மணி முதல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. அதிகாலை 2.30 மணியளவில் முழுமையாக புயல் கரையை கடந்தது.

இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்பட பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. மின்கம்பங்கள் முறிந்துள்ளன. மேலும் கடற்கரை பகுதிகளில் இருந்த படகுகள் சேதப்பட்டுள்ளது. புயலால் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் பாதிப்புகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சூப்பர்! புயல் முன்னெச்சரிக்கை, துரித நடவடிக்கை சிறப்பு - தமிழக அரசுக்கு அன்புமணி, ராமதாஸ் பாராட்டு!சூப்பர்! புயல் முன்னெச்சரிக்கை, துரித நடவடிக்கை சிறப்பு - தமிழக அரசுக்கு அன்புமணி, ராமதாஸ் பாராட்டு!

8 மாவட்டங்களுக்கு கனமழை

8 மாவட்டங்களுக்கு கனமழை

புயல் கரையை கடந்தாலும் கூட சென்னை வானிலை ஆய்வு மையம் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ஈரோடு, மாவட்டங்களிலும் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 நாள் சென்னை வானிலை என்ன?

7 நாள் சென்னை வானிலை என்ன?

இந்நிலையில் தான் சென்னை வானிலை மண்டல வானிலை ஆய்வு மையம் சென்னையில் அடுத்த 7 நாள் காலநிலை பற்றிய அறிவிப்பை இன்று மதியம் முன்கூட்டியே தெரிவித்துள்ளது. அதன்படி இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழை பொழிவுக்கு வாய்ப்புள்ளது. ஞாயிற்று கிழமையான நாளை வானம் ஓரளவு மேகமகூட்டத்துடன் இருக்கும். மேலும் மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளது. வெப்பநிலையானது அதிகபட்சமாக 28 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.

டிசம்பர் 12-13 தேதிகளில் எப்படி?

டிசம்பர் 12-13 தேதிகளில் எப்படி?

டிசம்பர் 12, 13ம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். இந்த 2 நாட்களும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பொழிய வாய்ப்புள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலையானது 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையானது 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

டிசம்பர் 14, 15, 16 நிலவரம்

டிசம்பர் 14, 15, 16 நிலவரம்

மேலும் டிசம்பர் 14, 15 மற்றும் 16ம் தேதிகளில்வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இந்த 3 நாட்களும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 3 நாட்களும் வெப்பநிலையை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சாக 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

English summary
The Chennai Regional Meteorological Department has announced the forecast for 7 days from today to December 16 as Cyclone Mandas has crossed the coast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X