Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜேஜே திரைப்பட நடிகரின் பரிதாபமான நிலை.. நண்பரால் ஏமாற்றம்.. திறமை இருந்தும் இந்த ஒரு நிலைமையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜேஜே திரைப்படத்தில் ஜமுனாவை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருந்த குணா கேரக்டரில் நடித்த சஷிகுமார் சுப்பிரமணி தற்போது தன்னுடைய நிலைமையை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு இப்போதும் வாய்ப்பு கிடைக்காததால் தான் செய்துவரும் வேலையைப் பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார்.

அவமானமும் வெற்றியும்

அவமானமும் வெற்றியும்

கோயம்புத்தூரில் பிறந்த சஷிகுமார் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்த இவர் படித்து முடித்த இவர் படிக்கும்போதே நடிக்க வேண்டும் என்று ஆசையோடு இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே இவர் இயக்குனர் பாலு மகேந்திரா போன்ற பல பிரபல இயக்குனர்களின் இடம் இவர் வாய்ப்புகளுக்காக தேடி அலைந்திருந்திருக்கிறார். ஆரம்பத்தில் பாலு மகேந்திராவின் உதவியாளர்களால் அவமானப்படுத்தப்பட்டு, திரும்பி இருக்கிறார். ஆனால் இப்ப வரைக்கும் அந்த அவமானத்தை மறைக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார். ஆனாலும் மீண்டும் மீண்டும் இவர் போராடி பாலு மகேந்திரா முன்பு தன்னுடைய நடிப்பை காட்டி அசத்தி இருக்கிறார். அதற்குப் பிறகு பாலு மகேந்திராவின் பல திரைப்படங்களை நடிப்பதற்கு சஷிக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது .

பல திரைப்படங்களில் நடிப்பு

பல திரைப்படங்களில் நடிப்பு

நடிப்பதற்காக பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும்போது ஆரம்பத்தில் ஜேஜே டிவியில் எடிட்டராக வேலை செய்து இருக்கிறார் அதற்குப் பிறகு சஷி 2001 ஆம் ஆண்டு பிரபலமான இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா போன்ற நட்சத்திரங்கள் நடித்த ஆனந்தம் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அந்த திரைப்படத்தில் ரம்பாவின் சகோதரராக நடித்திருப்பார். அதைத்தொடர்ந்து ஷாஜஹான், கன்னத்தில் முத்தமிட்டால், ஸ்ரீ ,ஜெ ஜெ, திருப்பாச்சி, தலைநகரம் ,தம்பி, தலை முறைகள் போன்ற பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். அதுவும் ஜேஜே திரைப்படத்தில் குணா கேரக்டரில் ஒரு தலை காதலால் அனைவருடைய மனதையும் கரைய செய்து இருப்பார்.

 சித்தி சீரியலில் நடிப்பு

சித்தி சீரியலில் நடிப்பு

இவர் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தற்போது சென்னையில்தான் வசித்து வருகிறாராம். இந்த நிலையில் இவருக்கு சொந்தமாக வீடு, கார் போன்ற எதுவும் இல்லாமல் தான் வாழ்ந்து வருகிறாராம். அதுமட்டுமல்லாமல் இப்ப வரைக்கும் இவருக்கு திருமணம் முடியாமல் தான் இருந்திருக்கின்றதாம். இவர் மட்டுமல்லாமல் இவருடைய தம்பிக்கும் திருமணமாகாமல் தான் இருக்கிறதாம் அதை உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர். என்ன தான் திறமை இருந்தாலும் அது பலரால் தட்டி பறிக்கப்பட்டு விடுகிறது என்று வருத்தத்தோடு கூறி இருக்கிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் ஒரு சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக ராதிகாவுடன் சித்தி சீரியலில் இவருடைய நடிப்பு பலரால் இப்போ வரைக்கும் பாராட்டப்பட்டு வருகிறது. அந்த சீரியலில் இவர் பிசிகல் சேலஞ்ச் உள்ள நபராக நடித்திருப்பார்.

நண்பனால் கிடைத்த ஏமாற்றம்

நண்பனால் கிடைத்த ஏமாற்றம்

வாழ்க்கையில் இவர் பலரால் ஏமாற்றப்பட்டு இருக்கிறாராம். அதுவும் குறிப்பாக இவருடைய உயிர் நண்பனாக இருந்தவரிடமே இவர் ஏமாற்றப்பட்டது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று உருக்கமாக பேசியிருக்கிறார். இவருடைய நண்பர் சஷி, நல்ல நிலைமைக்கு வந்த விட்டால் அதை என்னால் ஏத்துக்க முடியாது என்று இவர் காதுபடவே பேசி இருந்தாராம். அப்போது கூட அதைப்பற்றி அவர் பெரியதாக நினைக்கவில்லையாம். ஆனால் பெரிய பணக்கார நண்பரே இவரை பணத்தால் ஏமாற்றப்பட்ட பிறகுதான் இவருக்கு புத்தி வந்ததாக கூறி இருக்கிறார். இந்த நிலையில் இப்போது இவருக்கு திரைப்படங்களிலும் வாய்ப்பு அதிகமாக கிடைக்காததால், நடிப்பது எப்படி என்று சிலருக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும், சிலருக்கு ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் வேதனையோடு கூறி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+