சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Maanaadu: உங்கள் சுயநலத்திற்காக எதுக்கு ஜாதி, மதம் பெயரில் அரசியல்?.. பொட்டில் அடித்து சொன்ன மாநாடு

Google Oneindia Tamil News

சென்னை: ஜாதியின் பெயரிலும் மதத்தின் பெயரிலும் இன்னும் எத்தனை நாளுக்குத்தான் அரசியல் செய்ய போகிறீர்கள் என பொட்டில் அடித்தாற் போல் விளக்குகிறது மாநாடு.

சிம்புவின் மாநாடு என்ற பெயரிலேயே ஏதோ இது ஒரு அரசியல் படம் என தெரிந்தது. ஆனால் இதில் அரசியல் வசனங்கள், அரசியல், சயின்ஸ் பிக்ஷன், சமூகத்திற்கான நல்ல கருத்துகள், காமெடி என அனைத்தும் அடங்கியுள்ளது.

இந்த படத்தில் முக்கியமாக ஒரு விஷயம் சொல்லப்பட்டுள்ளது. இந்த படத்தில் நிறைய மெசேஜ்கள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் - ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது தீவிரவாதி என முத்திரை குத்துவது!.

ஒரே நாளில் தக்காளி விலை கடும் சரிவு... கிலோ ரூ.30க்கு விற்பனையால் மக்கள் ரொம்ப ஹேப்பிஒரே நாளில் தக்காளி விலை கடும் சரிவு... கிலோ ரூ.30க்கு விற்பனையால் மக்கள் ரொம்ப ஹேப்பி

கொலை

கொலை

முதல்வரை கொலை செய்ய எஸ் ஜே சூர்யா கையிலெடுக்கும் ஆயுதம் முஸ்லிம் இளைஞர், இந்து - முஸ்லீம் இடையே மதகலவரம். ஒரு முஸ்லிம் இளைஞரை தீவிரவாதியாக சித்தரித்து அவர் மூலம் கொலை சம்பவத்தை நடத்தி இந்த கொலையில் இந்து முஸ்லீம் இடையே மத கலவரத்தை உண்டு செய்து கலவரத்தை கட்டுப்படுத்துவது போல் செயல்படுவார் எஸ் ஜே சூர்யா. இதுதான் அவருடைய திட்டம்!

டைம் லூப்

டைம் லூப்

எஸ் ஜே சூர்யாவின் திட்டத்தை டைம் லூப் மூலம் அறிந்து கொள்ளும் சிம்பு, முதல்வரை கொன்று அந்த பழியை அப்பாவி முஸ்லிம் இளைஞர் மீது போட போகிறீர்கள் என நினைத்தால் மத கலவரத்தை உண்டாக்குறீங்க. அமெரிக்காவில் ஒருவன் 100 பேரை கொன்றால் அவன் சைக்கோ, இதே இஸ்லாமியர் கொன்றால் அவர் தீவிரவாதியா?

உண்மை

உண்மை

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் மக்களிடம் ஜாதியின் பெயரிலும் மதத்தின் பெயரிலும் அரசியல் செய்ய போகிறீர்கள். உங்களால் உண்மையிலேயே அரசியல் செய்ய முடியாதா, உங்கள் சுயநலத்திற்காக தீவிரவாதியையும் தீவிரவாதத்தையும் உருவாக விடுவீர்கள், நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கணுமா என சிம்பு கேட்பார்.

முஸ்லீம் மீதான பழிச்சொல்

முஸ்லீம் மீதான பழிச்சொல்

இப்படி ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரும் சுயநலத்துக்காக முதல்வரை கொன்றால் முதல்வர் மாறுவார், ஆனால் முஸ்லீம் மீதான பழிச் சொல் மாறாது என்பார். இந்த காட்சியில் சிம்புவிடம் உன் பெயர் என்ன என கேட்பார் எஸ் ஜே சூர்யா. அப்போது சிம்பு, அப்துல் காலிக் என்பார். சிம்புவையும் அவரது நண்பர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லாமல் ரகசிய இடத்திற்கு அழைத்து செல்லப்படுவார்.

லேசான தாடி

லேசான தாடி

அப்போது மீசை இல்லாமல் லேசான தாடியுடன் பைஜாமாவில் இருக்கும் சிம்புவை பார்த்து எஸ் ஜே சூர்யா, பாரதிராஜாவின் மகன் மனோஜிடம், "இவன் (சிம்பு) அப்படியே இருக்கான்ல" னு கேட்பார். அதாவது தீவிரவாதிகள் அணியும் ஆடை, அவர்களின் தோற்றம் குறித்து இந்த காட்சி விளக்குகிறது. கோவையில் 1998 ஆம் ஆண்டு கோவையில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டு 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதை மையமாக வைத்து கோவையில் மாநாடு நடத்துவது, அங்கு குண்டுவெடிப்பு நிகழ்த்துவது என காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.

Recommended Video

    Maanadu மாஸ்! தெறிக்க விடுகிறார்..Simbu..ரசிகர்கள் கொண்டாட்டம் | Tamil Filmibeat
    சிம்பு

    சிம்பு

    மற்றொரு காட்சியில் ஒரு முஸ்லிம் குடும்பத்தினரிடம் சிம்பு பேசி கொண்டிருப்பார். அப்போது அந்த பெண், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் விசாரணை நடத்த தன் கணவரை போலீஸார் அழைத்து சென்றதாகவும் அவர் மீண்டும் வீடு திரும்பவே இல்லை என்பார். டைம் லூப்பில் முதல்வரை கொலை செய்வது குறித்து தனது நண்பர்களிடம் சிம்பு விவரிக்கும் போது பிரேம்ஜி சொல்வார்- ஒரு கொலைதானே பண்ண போறான், நீ விட்டுவிடு என்பார். அதற்கு சிம்பு, என்ன நீ சாதாரணமா ஒரு கொலைதானேனு சொல்லிவிட்டே, இப்படி ஒவ்வொருத்தரையும் இவங்க கொலை செய்துகிட்டே போனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது தலைமுறை தலைமுறையாக களங்கம் இருந்து கொண்டே இருக்கும் என்பார். அரசியல் சுயலாபத்திற்காக அப்பாவி முஸ்லிம் மீது பழியை போட்டு கலவரத்தை ஏன் உண்டாக்குகிறீர்கள், குறிப்பிட்ட மதத்தை வைத்து ஏன் அரசியல் செய்கிறீர்கள் என்பதை சாட்டையால் அடித்தாற் போல் கேட்பதுதான் இந்த "மாநாட்டில்" சொல்லப்பட்ட மெசேஜ்!

    English summary
    What is the message given by Simbu's Maanaadu? Maaanaadu: Here is the message why politics doing on one particular religion?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X