பாஜக ஸ்கெட்ச் எம்.எல்.ஏவுக்கு இல்ல.. அமைச்சருக்காம்.. ‘இதான் சங்கதி’- புட்டுப்புட்டு வைக்கும் திமுக!
சென்னை : திமுகவில் ஒரு சிட்டிங் எம்.எல்.ஏவை தூக்க பாஜக ஸ்கெட்ச் போட்டதாக தகவல் பரவிய நிலையில், அவரே நான் திமுகவை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என விளக்கம் அளித்துவிட்டார்.
அந்த திமுக எம்.எல்.ஏவிடம் பாஜகவில் இருந்து யாருமே பேசவில்லை, அப்படி இருக்கும்போது இந்த தகவல் பரவியதற்கு பின்னணியில் பாஜகவின் திட்டமே இருக்கும் என்கிறார்கள் திமுகவினர்.
திமுக எம்.எல்.ஏ பாஜகவுக்கு தாவுவதாக பரவிய தகவல் தான் 'ஸ்கெட்ச்சே' எனக் கூறப்படுகிறது. அதாவது, குழப்பத்தை ஏற்படுத்தி, திமுக தலைமைக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் குடைச்சல் கொடுப்பதுதான் பாஜகவின் திட்டமாக இருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
இதற்கு மூளையாகச் செயல்பட்டதும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தலைதான் எனக் குற்றம்சாட்டுகிறார்கள் லோக்கல் திமுகவினர்.

பாஜகவின் குறி
2024 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது பாஜக. அதன் ஒரு பகுதியாக, மாற்றுக்கட்சி நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தான், கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ பாஜகவுக்கு தாவப்போகிறார் என்றும், அவர் தனது பதவியை ராஜினாமா செய்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என்றும் தகவல்கள் பரபரத்தன.

அண்ணாமலை கணக்கு?
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அம்மாவட்டத்தின் மற்ற எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அதன் காரணமாக பாஜக வீசிய வலையில் குளித்தலை எம்.எல்.ஏ சிக்கியுள்ளதாகவும் கூறப்பட்டது. அண்ணாமலை மேற்பார்வையில் இந்த ஸ்கெட்ச்சை போட்டது கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில் நாதன் என்றும் கூறப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிருப்தியில் இருக்கும் அந்த எம்.எல்.ஏவை தூக்கினால், அமைச்சருக்கும், திமுக தலைமைக்கும் ஒரு சேர செக் வைக்கலாம் என அண்ணாமலை கணக்குப் போட்டதாக தகவல்கள் சிறகடித்தன.

பயங்கர திட்டம்?
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான கருத்து மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அண்ணாமலையை அரைவேக்காடு என்றெல்லாம் செந்தில் பாலாஜி விமர்சித்திருப்பதால், அவருக்கு செக் வைக்க அண்ணாமலை நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் என்றும், இப்போது கரூர் மாவட்டத்திலேயே சிட்டிங் எம்.எல்.ஏவை தட்டித் தூக்கிவிட்டார் என்றும் பாஜகவினர் உற்சாக கூக்குரல் எழுப்பினர்.

முற்றுப்புள்ளி வைத்த திமுக புள்ளி
ஆனால், பாஜக தங்கள் பக்கம் இழுத்ததாகச் சொன்ன குளித்தலை திமுக எம்.எல்.ஏ மாணிக்கம், தான் எந்தக் காலத்திலும் திமுகவை விட்டு கட்சி மாற மாட்டேன், 30 வருடமாக குளித்தலை நகரச் செயலாளராக அமரவைத்திருக்கும் தலைமையை மீறி செயல்படும் பேச்சுக்கே இடமில்லை. எனக்கு அரசியலில் வாழ்வு கொடுத்த திமுகவுக்கு என்றென்றும் விசுவாசமாக இருப்பேன் என உறுதியாகக் கூறியுள்ளார். இதன் மூலம் பாஜகவினர் பரப்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

திமுகவினர் சொல்வது
விருதுநகரில் சமீபத்தில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் கூட, குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக கட்சி பணியாற்றியதற்காக விருது வழங்கினார். இந்த விருதுக்கு பரிந்துரை செய்தது அமைச்சர் செந்தில் பாலாஜி தான். அமைச்சருடன் இணைந்து தான் அவர் செயல்பட்டு வருகிறார். அவரைப் போய் கட்சி தாவுவதாக வதந்தி பரப்பி அம்பலப்பட்டிருக்கின்றனர் பாஜகவினர் என கரூர் மாவட்ட திமுகவினர் கூறுகின்றனர்.

பின்னணி என்ன?
அதிமுகவில் இருந்து திமுக 3 எம்.எல்.ஏக்களை தூக்கப்போவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து எழுந்த பரபரப்பை ஒட்டி, எம்.எல்.ஏக்கள் கட்சி தாவுவது தொடர்பாக ஈபிஎஸ் தரப்புக்கும் திமுகவுக்கும் இடையே விவாதமே நடந்தது. ஈபிஎஸ், திமுக எம்.எல்.ஏக்கள் 10 பேர் எங்களுடன் பேசி வருகிறார்கள் என்றார். அதற்கு திமுகவின் ஆர்.எஸ்.பாரதி அதிமுகவின் 50 எம்.எல்.ஏக்கள் எங்களுடன் பேசுகிறார்கள் என பதிலடி கொடுத்தார்.

வதந்தி தான் ஸ்கெட்ச்சே
இதுபோன்ற பரபரப்பைக் கிளப்பி, லைம்லைட்டில் வருவதற்காகத்தான் பாஜக இப்படி ஒரு தகவலை திட்டமிட்டு பரப்பி விட்டதாக கூறுகின்றனர் திமுகவினர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவரது மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ பெயரை இழுத்து விட்டதாகவும், உண்மையில், அந்த எம்.எல்.ஏவிடம் பாஜகவில் இருந்து யாருமே பேசவே இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். இது எந்தளவுக்கு உண்மை என்பது போகப்போகத் தெரியும்.
-
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications