"சல்லாபம்".. மேலிடம் வரை ரிப்போர்ட் போய்டுச்சாமே.. "லஷ்மண ரேகை" ராமர்களுக்கு கிடையாதா.. ஒரே டென்ஷன்
சென்னை: சைதை சாதிக் சர்ச்சையாக பேசியதற்கு, கனிமொழி உட்பட பலரும் வருத்தம் தெரிவித்தார்களே, திருச்சி சூர்யாவின் ஆபாச பேச்சுக்கு இதுவரை பாஜகவில் யாராவது வருத்தம் தெரிவித்துள்ளார்களா? என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
காயத்ரி ரகுராம் கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. இதற்கு காயத்ரி ரகுராம், "நான் கட்சியை கலங்கப்படுத்தவில்லை. என்னிடம் விளக்கம் கேட்காமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுத்துள்ளார். இதனை விடமாட்டேன். தொடர்ந்து கட்சி பணி செய்வேன் என்று காயத்ரி ரகுராம் கூறி வருகிறார்.
இதனிடையே, அரசியல் விமர்சகரும், திமுக ஆதரவாளருமான டாக்டர் ஷர்மிளாவிடம், இதுகுறித்த கேள்வியை முன்வைத்தோம்.. நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஷர்மிளா தந்த ஸ்பெஷல் பேட்டியில் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
அவசர அவசரமாக.. திருமாவளவன் மேடையில் ஓடிவந்து சொன்னாரே.. இப்படி பாஜகவில் செய்வீங்களா: டாக்டர் ஷர்மிளா

லஷ்மன் கோடு
"லட்சுமண ரேகையை தாண்டும் கட்சிக்காரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அதிரடி ஆக்ஷன் பாயும் என்று அண்ணாமலை எச்சரிக்கிறார். ஏன் லட்சுமணன் ரேகை சீதைகளுக்கு மட்டும்தானா? ராமர்களுக்கு கிடையாதா? திருச்சி சூர்யா அவ்வளவு கேவலமாக பேசினாரா? அவர் லட்சுமண ரேகையை கடக்கவில்லையா? எச்.ராஜா மேடைகளில் அவ்வளவு கேவலமாக பேசுகிறாரே, அவர் லட்சுமணன் ரேகையை கடக்கவில்லையா? அதென்ன லட்சுமண ரேகை, பெண்களுக்கு மட்டும்தான் நீங்க போடுவீங்களா? ஏன் உங்க கட்சியில் உள்ள ஆண்களுக்கு போடமாட்டீங்களா? கேடி ராகவனுக்கு லட்சுமணன் ரேகை கிடையாதா?

களியாட்டம்
அறிவுரீதியாக, தெளிவாக இருக்கக்கூடிய யாருமே அந்த பாஜக பக்கம் போக மாட்டாங்க.. அந்த கட்சி எப்படிப்பட்டது? பெண்களை எப்படி இழிவுபடுத்தக்கூடிய கட்சி என்பது எல்லாருக்கும் தெரியும்.. அறிவுரீதியாக இருப்பவர்கள், சுயலாபத்துக்கு வேண்டுமானால் அந்த கட்சிக்கு போயிருக்கலாம், அல்லது பாஜகவுக்கு போனால், நமக்கு ஏதாவது நல்லது நடக்குமோ என்ற அறியாமையில் போகலாம். திருச்சி சூர்யா விவகாரத்தில், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வானதி சொல்கிறாரே, சைதை சிவா விவகாரத்தில் திமுக உடனே எப்ஐஆர் பதிவு பண்ணினாங்களே? கனிமொழியும் உடனே பொதுவெளியில் வருத்தமும் தெரிவிச்சாங்களே?

சூர்யா
கனிமொழி இப்படி சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது.. ஆனாலும் தன்னுடைய கட்சிக்காரர் இப்படி பேசிவிட்டார் என்பதற்காக தார்மீக ரீதியாக பொறுப்பை எடுத்துக் கொண்டார்.. இது தவறு என்று சொல்லி கனிமொழி மன்னிப்பும் கேட்டார்.. ஆனால், பாஜகவில் இருக்கக்கூடிய யாராவது ஒரு பெண் தலைவரோ அல்லது அண்ணாமலையோ, சூர்யா பேசியது தவறு என்றோ, அல்லது சூர்யா சார்பில் நாங்கள் டெய்ஸியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றோ சொன்னாங்களா?

செத்து கிடப்பாய்
பெண்கள் மீது கை வைத்தால் கண் இருக்காது, கை இருக்காது என்கிறாரே.. கொச்சையாகவும் ஆபாசமாகவும் பேசி கொலை மிரட்டல் விடுகிறார் சூர்யா.. இந்த வருஷ கடைசிக்குள் நீ செத்துக்கிடப்பாய், அதற்கு நான்தான் பொறுப்பு என்கிறார் சிவா.. இப்படி ஒரு ஆடியோவை கேட்ட பின்பும் 2 வாரத்துக்கு மவுனமாக இருந்திருக்கிறார் அண்ணாமலை என்றுதானே பொருள்? இந்த ஆடியோ இப்போது வெளிவராவட்டால், எந்த நடவடிக்கையும் அவர் எடுத்திருக்கவே மாட்டார் என்றார் ஷர்மிளா.

சின்ன கட்சி
கிட்டத்தட்ட இதே கருத்தைதான், மூத்த அரசியல் விமர்சகர் ராம சுப்பிரமணியமும் தெரிவித்துள்ளார். ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னதாவது: திமுகவில் குஷ்புவை அவ்வளவு கேவலமாக சைதை சாதிக் பேசிவிட்டார் என்று அண்ணாமலை கொந்தளித்தார்.. ஆனால், தான் பேசியதற்கு பொதுவெளியிலேயே சைதை சாதிக்கும் வருத்தம் தெரிவித்தார்... கனிமொழியும் அதற்காக வருத்தம் தெரிவித்தார்கள்.. கட்சியும் இதில் தலையிட்டு, சாதிக்கை கண்டித்தது.. ஆனால், சாதிக் பேசியதைவிட நூறு மடங்கு கேவலமாக திருச்சி சூர்யா பேசியிருக்கிறார்.. காது கொடுத்து கேட்க முடியல.. இப்படியெல்லாம் பேசிவிட்டு, சமாதானம் ஆவது என்பது அநாகரீகத்தின் உச்சம்..

சல்லாபம்
தமிழ்நாட்டில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலைமையில்தான் பாஜக போய் கொண்டிருக்கிறது.. ஆளும் கட்சியான திமுகவே இப்படியெல்லாம் செய்வது கிடையாது.. சின்ன கட்சி இந்த பாஜக.. ஆனால், எதுக்கெடுத்தாலும் திமுகவுடன் தங்களை ஒப்பிட்டுக் கொள்கிறார்கள்.. திமுகவுடன் இந்த பாஜகவை கம்பேர் செய்ய முடியுமா? ஒருபக்கம் காலை நேரங்களில், கையில் வேல் எடுத்துக் கொண்டு யாத்திரை போவது, சாயங்காலம் ஆனால், காமக்களியாட்டங்கள், சல்லாபங்கள் நடப்பதாக முன்பெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டன.. கேடி ராகவன் விவகாரம் குறித்து விசாரிக்க கமிட்டி போட்டாங்க.. அது என்ன ஆனது என்றே தெரியவில்லை..

ஹோப் வானதி
நடந்த சம்பவங்கள் குறித்து காயத்ரி டெல்லிக்கு காயத்ரி ரிப்போர்ட் அனுப்பி உள்ளதாக தெரிகிறது.. வானதி சீனிவாசன், பாஜக மகளிர் பெண்கள் அகில இந்திய தலைவி என்பதால், அவரிடம் புகார் தந்ததாகவும், அதை மேலிடத்துக்கு அனுப்புவதாக காயத்ரியிடம் வானதி நம்பிக்கை கூறியதாகவும்கூட செய்திகள் வருகின்றன.. நான் பார்த்துக் கொள்கிறேன், கவலைப்படாதே என்று அவர் சொன்னாராம்.. எனவே, பாஜக மேலிடம் நிச்சயம், நடந்த சம்பவங்களை கண்டிக்கும் என்றே தெரிகிறது" என்றார்.