Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆமா நீங்க எந்த மீடியா..? உங்க வாய்க்கு என்னாச்சு? பயமா..? மக்கள் வாயை மூட முடியாது.. சீறிய சசிகலா

சசிகலாவிடம் ஒரு செய்தியாளர் கேள்வி கேட்டதற்கு நீங்க எந்த பிரஸ் என்று கேட்டார். செய்தியாளர்கள் ஏன் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில்லை என்றும் சசிகலா கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல எத்தனையோ தவறுகள் நடக்கின்றன. அதை ஏன் யாரும் வெளியிடுவதில்லை. செய்தியாளர்களின் வாய்கள் அடைக்கப்பட்டிருக்கிறதா?அல்லது பயத்தினால் பேசாமல் இருக்கிறீர்களா என்று சசிகலா கேட்டுள்ளார்.

Recommended Video

    சென்னை: அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை... சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு!

    சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவிடம் அதிமுகவில் எப்போது இணைவீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த அவர், செய்தியாளர்கள் ஏன் அதிமுக கட்சியைப் பற்றி மட்டும் கேள்வி எழுப்புகிறீர்கள் என்று கேட்டார். அது எங்களின் உள்கட்சி விசயம். எங்கள் பிரச்சினையை நாங்கள் தீர்த்துக்கொள்வோம்.

     தவறை தட்டிக்கேட்ட மாட்டீர்களா

    தவறை தட்டிக்கேட்ட மாட்டீர்களா

    இத்தனை சேனல்கள் வந்து செய்தி சேகரிக்கிறீர்கள். எல்லோருடைய வேலையும் எதுவாக இருக்க வேண்டும். அரசாங்கம் இப்போது என்ன செய்கிறது. அதில் எதுவும் தவறுகள் இருக்கிறதா? என்று சொல்ல வேண்டும். அதற்கு உண்டான கேள்விகளை யாரும் ஏன் கேட்பதில்லை.

    மக்கள் வாயை மூட முடியாது

    மக்கள் வாயை மூட முடியாது

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல எத்தனையோ தவறுகள் நடக்கின்றன. அதை ஏன் யாரும் வெளியிடுவதில்லை. செய்தியாளர்களின் வாய்கள் அடைக்கப்பட்டிருக்கிறதா? பவரை வைத்து அதிகாரத்தை வைத்து வாயை மூடலாம். பயத்தை கொடுத்து பிரஸ் வாயை மூடலாம்...ஆனால் ஒருபோதும் மக்கள் வாயை மூட முடியாது என்றார்.

    தப்பு கணக்கு போடாதீங்க

    தப்பு கணக்கு போடாதீங்க

    இது எல்லாம் சரி என்று ஆள்பவர்கள் நினைத்தால் அவர்கள் போகும் பாதை தவறு. அவர்கள் போடும் கணக்கு தப்புக்கணக்கு. பொதுமக்களுக்கு தெரியும் எது சரி எது தவறு என்று. மக்கள்தான் வாக்களிப்பவர்கள். பிரஸ் வந்து வாக்களிக்கப்போவதில்லை. பொதுமக்கள் மனதறிந்து பிரஸ் நடத்தினால் மட்டுமே உங்களுக்கும் நல்லது உங்கள் நிறுவனத்திற்கும் நல்லது என்றார்.

    நீங்க எந்த பிரஸ்

    நீங்க எந்த பிரஸ்

    பிரதமர் பற்றி செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு நீங்க எந்த பிரஸ் என்று கேட்டார் சசிகலா. அதற்கு உடனே தனது நிறுவனத்தின் பெயரை சொல்லவே.. நான் கூட சன்டிவியோன்னு நினைச்சேன் என்று கூறி விட்டு சசிகலா சிரித்தார். முன்பெல்லாம் விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் நீங்க எந்த பத்திரிகை என்று கேட்பார். நீங்க எந்த டிவி என்று கேட்டு விட்டு பதில் சொல்வார் விஜயகாந்த். அதே பாணியில் இன்று கேட்டுள்ளார் சசிகலா.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+