தமிழக மின்சார வாரியத்தின் கடன் ரூ1,34,119.94 கோடி- 332% அதிகரிப்பு: வெள்ளை அறிக்கையில் திடுக் தகவல்
சென்னை: தமிழக மின்சார வாரியத்தின் மொத்த கடன் ரூ1,34,119.94 கோடி என்று இன்று வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் மின்சார வாரிய நிலைமை குறித்து கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு 31.03.2021 நிலவரப்படி உள்ள கடன் விவரம்:

தமிழ்நாடு அரசுக் கடன் ரூ4,582.45 கோடி
உதய் கடன் ரூ4,563.00 கோடி
மொத்த கடன் ரூ1,34,119.94 கோடி
2011-12-ல் ஆண்டு நிகர இழப்பு ரூ15055.34 கோடி
2020-21-ல் ஆண்டு நிகர இழப்பு ரூ17497.85 கோடி
அதாவது 10 ஆண்டுகளில் ஆண்டு நிகர இழப்பு 116.22%
2011-12-ல் ஆண்டு ஒட்டுமொத்த இழப்பு ரூ53696.25 கோடி
2020-21-ல் ஆண்டு ஒட்டுமொத்த இழப்பு ரூ111084.50 கோடி
அதாவது 10 ஆண்டுகளில் ஆண்டு நிகர இழப்பு 106.88%
2011-12-ல் ஆண்டு கடன் ரூ31040.12 கோடி
2020-21-ல் ஆண்டு கடன் ரூ134119.94 கோடி
அதாவது 10 ஆண்டுகளில் கடன் 332.09% அதிகரிப்பு
1 யூனிட் மின்சாரத்துக்கு ரூ9.06 செலவு
1 யூனிட் மின்சாரத்துக்கான வசூல் ரூ6.70
1 யூனிட் மின்சாரத்துக்கான நட்டம் ரூ2.36
10 ஆண்டுகளில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பணியாளர்களுக்கான செலவு 161.83% அதிகரிப்பு
10 ஆண்டுகளில் ஓய்வூதியங்களுக்கான செலவு 108.47% அதிகரிப்பு
10 ஆண்டுகளில் வட்டிச் செலவு 212.85% அதிகரிப்பு
ஒட்டுமொத்தமாக 10 ஆண்டுகளில் செலவு 175.58% அதிகரிப்பு
நிலக்கரி முதன்மை உள்ளீடு செலவு அதிகரிப்பு, வெளிப்புற மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் வாயிலாக செலவு அதிகரிப்பு ஆகியவையே மொத்த செலவு அதிகரிப்புக்கு காரணம்.
மொத்த செலவுகளில் மின் கொள்முதல் செலவினங்கள் சதவீதமானது 2020-21ல் 71.03%.
10 ஆண்டுகளில் மின் கொள்முதல் செலவுகள் 125.02% அதிகரித்துள்ளது.
7 ஆண்டுகளாக மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கு வசூல் செய்யப்படவில்லை. ஆனால் அந்த மின்சாரத்துக்காக 1 யூனிட்டுக்கு ரூ3.32 மானியம் வழங்கப்பட்டுள்ளது.
2020-21ல் வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தால் ஏற்பட்ட மொத்த இழப்பு ரூ18,735 கோடி.
வீட்டு உபயோக மின்கட்டணத்துக்கு 1 யூனிட்டுக்கு மானியம் ரூ1.09. அதிக மின்சாரம் உபயோகிப்பவர்களே இந்த மானியத்தையும் அதிகமாக பெறுகின்றனர்.
10 ஆண்டுகளில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மொத்த கடன்கள் 151.75% அதிகரிப்பு; ஒட்டுமொத்த இழப்பு 68.22%.
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் செலவுகள் 10 ஆண்டுகளில் 159.22% அதிகரிப்பு;
10 ஆண்டுகளில் பணியாளர்களுக்கு மட்டுமான செலவு 402.73% ஆக அதிகரித்துள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications