சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபாஷ்.. சட்டப்பேரவையில் 7,685 கேள்விகள் எழுப்பிய திமுக எம்.எல்.ஏ.. 6,478 கேள்விகள் எழுப்பிய பாமக..!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 7 ஆயிரத்து 685 கேள்விகள் எழுப்பி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் திமுக சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி.

இவர் சென்னை திரு.வி.க.நகர் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர்.

3 நாட்கள்தான்.. ஆளுநராக சனிக்கிழமை பதவி ஏற்கும் ஆ.என் ரவி.. களமிறக்கப்பட்டது ஏன்? என்ன காரணம்? 3 நாட்கள்தான்.. ஆளுநராக சனிக்கிழமை பதவி ஏற்கும் ஆ.என் ரவி.. களமிறக்கப்பட்டது ஏன்? என்ன காரணம்?

இவருக்கு அடுத்தபடியாக பாமக தலைவரும், மேட்டூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஜி.கே.மணி 6 ஆயிரத்து 478 கேள்விகள் எழுப்பி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

சட்டமன்றம்

சட்டமன்றம்

எம்.எல்.ஏ., எம்.பி., கவுன்சிலர், என தங்களுக்கான பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு காரணமே அவர்கள் நமக்காக சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் குரல் கொடுப்பார்கள் என்பதற்காக தான். தொகுதிப் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைத்து உரிய தீர்வு பெற்றுக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு வாக்காளரும் தங்களுக்கான பிரதிநிதிகளை ஒவ்வொரு தேர்தலிலும் தேர்வு செய்கின்றனர்.

5 ஆண்டுகள்

5 ஆண்டுகள்

இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படும் பெரும்பாலனவர்கள் அரசின் சலுகைகளை 5 ஆண்டுகளாக அனுபவித்துவிட்டு, சென்னைக்கு சென்றோமா, வந்தோமா என்று தான் இருக்கிறார்கள். ஒரு சிலர் தான் தங்களை தேர்வு செய்த மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும், பேரவையில் தொகுதி பிரச்சனையை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகின்றனர்.

7,685 கேள்விகள்

7,685 கேள்விகள்

அந்த வகையில் சென்னை திரு.வி.க.நகர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, கடந்த 22 நாட்களாக நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது 7 ஆயிரத்து 685 கேள்விகள் எழுப்பி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். யாரும் நம்மை எதுவும் கூறிவிடுவார்களோ என எண்ணாமல், சலிப்பின்றி நாள்தோறும் தொகுதி மக்களுக்காக அனைத்து துறை சார்ந்த்தும் எழுத்துப்பூர்வமாகவும், நேரிடையாகவும் கேள்விகளை எழுப்பியுள்ளார் இவர்.

146 எம்.எல்.ஏ.க்கள்

146 எம்.எல்.ஏ.க்கள்

இதுவரை 146 சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து 24 ஆயிரத்து 501 கேள்விகள் எழுத்து மற்றும் நேரடியாக கேட்கப்பட்டுள்ளது. இதில் திமுக எம்.எல்.ஏ. தாயகம் கவி முதலிடத்தை பிடித்ததை தொடர்ந்து 2-வது இடத்தில் பாமக உள்ளது. அக்கட்சியின் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி 6 ஆயிரத்து 478 கேள்விகளை எழுத்துப்பூர்வமாகவும் நேரடியாகவும் எழுப்பி சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக மூன்றாவது சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் 3 ஆயிரத்து 583 கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

முதல் 5 இடம்

முதல் 5 இடம்

இவர்களை தொடர்ந்து நான்காவது இடத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளார். இதுவரை அவர் எழுப்பிய கேள்விகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 914 ஆகும். இதேபோல் 5-வது இடத்தில் திருவாரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் இருக்கிறார். இவர் முன்வைத்த வினாக்களின் எண்ணிக்கை 1,291 ஆகும். அதிக

திமுக-பாமக

திமுக-பாமக

தன்னை தேர்வு செய்த மக்களுக்காகவும், தொகுதிக்காகவும் சட்டப்பேரவையில் அதிகம் கேள்வி எழுப்பியவர்களின் பட்டியலில் திமுகவும், பாமகவும் மட்டுமே முதல் 5 இடங்களில் உள்ளன. காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் அதிகம் கேள்வி எழுப்பியவர்களின் முதல் 5 இடங்களில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Who raised much question in the Tn Assembly..?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X