சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தினேஷ் கார்த்திக்கின் “ஹெல்மெட்டை” கவனிச்சீங்களா? அதுமட்டும் ஏன் இவ்வளவு “வித்தியாசமாக” இருக்கு?

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் மீண்டும் பழைய பார்முக்கு திரும்பி கலக்கி வரும் நிலையில் அவர் அணியும் ஹெல்மெட்டும் பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அப்படி அதில் என்ன சிறப்பு என்ற உங்கள் கேள்விக்கான பதில்தான் இந்த பதிவு.

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராகவும், தற்போது பினிஷர் பேட்ஸ்மேனாகவும் அவதாரம் எடுத்து இருக்கும் தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அணிக்காக இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார்.

19 வயதில் இந்திய அணியில் அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், தன்னுடைய அபாரமான விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமையால் பலரை கவர்ந்தார். ஆனால் அடுத்த ஆண்டு வந்த தோனி என்ற புயல் தினேஷ் கார்த்திக்கின் இருப்பை அசைத்து பார்த்தது.

ரட்சிதா விலகிய சேனலில் கெத்தாக களமிறங்கும் தினேஷ்.. காரணம் அது தானா..!!?? ரட்சிதா விலகிய சேனலில் கெத்தாக களமிறங்கும் தினேஷ்.. காரணம் அது தானா..!!??

தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட்

தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட்

இதனால் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கின் இடம் நிலையற்றதாக மாறியது. ஐபிஎல் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த சில தொடர்களில் இந்திய அணியில் வாய்ப்பை பெறுவதும் பின்னர் நீக்கப்படுவதுமாக இருந்தார் தினேஷ் கார்த்திக். இதுவரை 94 ஒருநாள் போட்டிகள், 26 டெஸ்ட் போட்டிகள் 52 டி20 போட்டிகள் 229 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

வங்கதேச போட்டி

வங்கதேச போட்டி

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை - வங்கதேசம் இடையிலான நிதாஹஸ் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக 22 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்ததன் மூலம் மீண்டும் கவனிக்கத்தக்க வீரர் ஆனார். அதன் பிறகு மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்படாமல் இருந்த தினேஷ் கார்த்திக் கமெண்டரி பணியும் செய்தார்.

மீண்டும் ஃபார்மில் கார்த்திக்

மீண்டும் ஃபார்மில் கார்த்திக்

அவர் ஓய்வை அறிவிக்கும் முன்பே அவர் ஓய்வுபெற்றதைபோல் (2004-2019) என்று குறிப்பிட்டது ஒரு விளையாட்டு தொலைக்காட்சி. ஆனால், கடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் தன்னுடைய பார்மை நிரூபித்து இந்திய ஆணியில் இடம்பெற்று இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது போட்டியில் 2 பந்துகளில் 10 ரன்களை குவித்து இந்தியாவை வெற்றிபெற வைத்தார் தினேஷ் கார்த்திக்.

வித்தியாசமான ஹெல்மெட்

வித்தியாசமான ஹெல்மெட்

இந்த நிலையில் அவரது ஆட்டத்தை போன்றே அவர் அணிந்த ஹெல்மெட் குறித்தும் ரசிகர்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் புதிய வெளிர் நீல நிற சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், தினேஷ் கார்த்திக் மற்ற வீரர்களை விட வித்தியாசமாக அதே வெளி நீல நிறத்தில் ஹெல்மெட்டை அணிந்து விளையாடினார்.

புதிய வடிவம்

புதிய வடிவம்

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் 4 வகையான ஹெல்மெட்டை மட்டுமே அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். ஆனால், தினேஷ் கார்த்திக் அணியும் ஹெல்மெட் வடிவம் அனைத்திலும் மாறுபட்டது. மூன் வாக்கர் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த வடிவிலான ஹெல்மெட்டை தினேஷ் கார்த்திக் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். ஐபிஎல் போட்டிகளிலும் அந்த அணியின் சீருடை நிறத்துக்கு ஏற்ப இந்த ஹெல்மெட்டை பயன்படுத்துகிறார் அவர்.

மனித தலை வடிவம்

மனித தலை வடிவம்

இதேபோன்ற ஹெல்மெட்டை இளம் வீரர் ராகுல் திரிபாதியும் பயன்படுத்துகிறார். மற்றவர்களைவிட வித்தியாசமாக இருப்பதாலேயே பலரது கவனத்தை இது ஈர்க்கிறது. அமெரிக்க கால்பந்து, பேஸ்பால் போன்ற விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் ஹெல்மெட் வடிவத்தை இது பிரதிபலிக்கிறது. மற்ற வீரர்கள் அணியும் ஹெல்மெட் வட்ட வடிவில் இருக்கும் சூழலில் தினேஷ் கார்த்திக்கின் ஹெல்மெட் மட்டும் மனித தலை வடிவத்திலேயே இருக்கும்.

என்ன சிறப்பு?

என்ன சிறப்பு?

இதன் காரணமாக ஹெல்மெட்டின் எடை குறைவாகவும், பந்துகளை அடிக்கும்போதும், ரன் ஓடும்போதும் அசையாமல் இருக்கும். இதனால் நீண்ட நேரம் தலையில் அணிந்திருந்தாலும் ஹெல்மெட் இடையூறாக இருக்காது. அத்துடன் மற்ற ஹெல்மெட்டுகளை விட இதன் முன் பகுதி நடுப்பகுதி மற்றும் பின்பகுதிகளில் அதிக துளைகள் இருப்பதால் காற்றோட்டம் கூடுதலாக இருக்கும். எனவே வியர்வை தலையில் தங்காது.

கீப்பிங் ஹெல்மெட்

கீப்பிங் ஹெல்மெட்

சொல்லப்போனால் தலையில் ஹெல்மெட் என்ற ஒன்றை அணிந்திருப்பதே தெரியாமல் விளையாட வேண்டும் என்றால் இதை பயன்படுத்தலாம். தினேஷ் கார்த்திக் இதில் மட்டும் வித்தியாசமானவர் அல்ல. மற்ற விக்கெட் கீப்பர்கள் கீப்பிங் செய்யும் போது பேட்டிங் ஹெல்மெட்டை பயன்படுத்தியபோது ஹாக்கி கோல் கீப்பர் அணிவதை போன்ற ஹெல்மெட்டை அணிந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவர் தினேஷ் கார்த்திக்.

English summary
The Indian wicket keeper Dinesh Karthik is back to his old form and the helmet he wears is attracting the attention of many. So this post is the answer to your question about what is so special about his helmet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X