சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்துவை புறக்கணித்ததா திமுக.. திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பு..!

அரசு விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ மாரிமுத்துவை புறக்கணித்தது ஏன்?

Google Oneindia Tamil News

சென்னை: திருத்துறைப்பூண்டி கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்துவை, அரசின் நலத்திட்ட விழாவுக்கு அழைக்கப்படவில்லை.. இது ஒரு சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்த முறை பிரச்சாரத்தின்போது, முதலமைச்சராக தான் பதவியேற்றவுடன், பொதுமக்களின் மனுக்கள் மீது 100 நாள்களில் தீர்வு காணப்படும் என்று முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

திமுக ஆட்சியிலாவது.. ராமஜெயம் கொலை வழக்கு விசாரிக்கப்படுமா.. மு.க. ஸ்டாலின் உத்தரவிடுவாரா..?திமுக ஆட்சியிலாவது.. ராமஜெயம் கொலை வழக்கு விசாரிக்கப்படுமா.. மு.க. ஸ்டாலின் உத்தரவிடுவாரா..?

அதன்படியே முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், அவர் கையெழுத்திட்ட முதல் ஐந்து கோப்புகளில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டமும் இடம்பெற்றிருந்தது. இதற்காகவே ஒரு புதிய துறையும் உருவாக்கப்பட்டு, இதை செயல்படுத்த ஒரு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 முதல்வர்

முதல்வர்

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில், உடனடி தீர்வு காணப்பட வேண்டிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.. இந்த விழாவிற்கு கலெக்டர் சாந்தா, நாகப்பட்டினம் எம்பி எம். செல்வராஜ், திருவாரூர் எம்எல்ஏ பூண்டிகே.கலைவாணன், மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டிஆர்பிராஜா, உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஆனால், இதே திருவாரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட, திருத்துறைப்பூண்டி தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ மாரிமுத்து அழைக்கப்படவில்லை.

அதிருப்தி

அதிருப்தி

இது திருத்துறைப்பூண்டி தொகுதி மக்களிடையேயும், திருவாரூர் கம்யூனிஸ்ட் கட்சியினரிடமும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது... இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ என்பதால் அவர் அழைக்கப்படவில்லையா? அல்லது எளிமையானவர் என்பதால் அழைக்கப்படவில்லையா? என்பன போன்ற கேள்விகளை தொகுதி மக்கள் கேட்க தொடங்கி உள்ளனர்.

 பாகுபாடு

பாகுபாடு

அதுமட்டுமல்ல, "இது அரசு விழா, கட்சி பாகுபாடு பார்க்காமல், மாவட்டத்தில் உள்ள எல்லா எம்எல்ஏக்களையும்தானே அழைத்திருக்கணும்? திமுக கூட்டணியில்தானே கம்யூனிஸ்ட் கட்சியும் இருக்கு? திமுக எம்எல்ஏக்கள் இருக்கிற தொகுதிகளில் மட்டும் பயனாளிகளை தேர்ந்தெடுத்து, நலத்திட்டங்களை வழங்குவது சரியா? ஒரு முதல்வருக்கு எல்லா தொகுதியும் பொதுவானதுதான். இனியாவது ஸ்டாலின் இந்த விஷயத்தில் கவனமாக இருக்கணும்" என்ற பொருமலும் தொகுதிக்குள்ளிருந்து எழுகிறது.

 மறுப்பு

மறுப்பு

ஆனால், திமுக தரப்பிலோ இது மறுக்கப்படுகிறது.. வேண்டுமென்றே இப்படி செய்யவில்லை என்றும், திருத்துறைப்பூண்டி தொகுதியில பயனாளிகள் யாரும் இல்லை என்பதால், மாரிமுத்துவை அழைக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்..

 ஸ்டாலின்

ஸ்டாலின்

எனினும், இந்த காரணத்தையும் தொகுதி மக்கள் மறுக்கிறார்கள்.. அதெப்படி திருத்துறைப்பூண்டி தொகுதியில் பயனாளிகளே இல்லை என்று சொல்ல முடியும்? எத்தனையோ பேர் முதல்வரிடம் மனு தந்திருக்கிறோமே? மாரிமுத்துவை அழைக்காததற்கு ஏதோ சாக்கு சொல்லப்படுகிறது, இனியாவது இதுபோன்ற தவறை திமுக தரப்பில் செய்யாமல் இருக்கட்டும்" என்று ஆதங்கத்துடன் கூறுகிறார்கள்.எனினும், இந்த காரணத்தையும் தொகுதி மக்கள் மறுக்கிறார்கள்.. அதெப்படி திருத்துறைப்பூண்டி தொகுதியில் பயனாளிகளே இல்லை என்று சொல் முடியும்? எத்தனையோ பேர் முதல்வரிடம் மனு தந்திருக்கிறோமே? மாரிமுத்துவை அழைக்காததற்கு ஏதோ சாக்கு சொல்லப்படுகிறது, இனியாவது இதுபோன்ற தவறை திமுக தரப்பில் செய்யாமல் இருக்கட்டும்" என்று ஆதங்கத்துடன் கூறுகிறார்கள்.

English summary
Why Thiruvarur MLA Marimuthu was not invited to the TN Gov functionWhy Thiruvarur MLA Marimuthu was not invited to the TN Gov function
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X