பட்ஜெட் தொடங்கும் முன்..உதயநிதியின் சீட்டுக்கு வந்து வணக்கம் வைத்த திமுக எம்எல்ஏக்கள்.. காரணம் என்ன?
சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர் ஸ்டாலினுக்கு வணக்கம் சொல்லியது போல் அவரது மகனும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கும் திமுக உறுப்பினர்கள் வணக்கம் சொல்லியது, தனது அதிரடி செயல்களால் உதயநிதி எத்தனை அளவுக்கு தனது செல்வாக்கை உயர்த்தியிருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
உதயநிதி- தயாரிப்பாளர், நடிகர், திமுக உறுப்பினர், திமுக இளைஞரணி செயலாளர் என விஸ்வரூப வளர்ச்சியை அடைந்தார். வெறும் திமுக உறுப்பினராக இருந்த உதயநிதி நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு அவரது பிரச்சாரமும் ஒரு காரணம் என சொல்லப்பட்டதை அடுத்து அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.
அவர் நாடாளுமன்றத் தேர்தலிலேயே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு கட்சி தலைமை வாய்ப்பு கொடுக்கவில்லை. இதையடுத்து சட்டசபை தேர்தலிலும் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அவர் கோவையில் வைத்த ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களால் திரும்பி பார்க்க வைக்கப்பட்டன.

எய்ம்ஸ் மருத்துவமனை
அது போல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கப்படாததை வெளிப்படுத்தும் விதமாக ஒரு செங்கல்லில் எய்ம்ஸ் என எழுதி ஒவ்வொரு பிரச்சாரங்களிலும் " நான் எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு கொண்டு வந்துவிட்டேன்" என கூறி பரபரப்பை கிளப்பினார். இவர் முன்னெடுத்த இந்த செயல் இன்று மற்ற மாநிலங்களிலும் பேசு பொருளாக உள்ளது.

எய்ம்ஸ் செங்கல்
திமுக வென்றவுடன் அந்த செங்கல்லை தனது தந்தையும் தலைவருமான ஸ்டாலினுக்கு பரிசாக கொடுத்தார் உதயநிதி. அதன் பின்னர் தான் போட்டியிட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் எத்தனை குறுகிய சந்தாக இருந்தாலும் அதன் உள்ளே நெளிந்து வளைந்து சென்று குறைகளை கேட்டறிந்தார். பலரும் நுழைய தயங்கும் நீண்ட காலமாக பூட்டிக் கிடக்கும் கழிவறையில் அசால்ட்டாக நுழைந்து ஆய்வு மேற்கொண்டார்.

மனிதரே அள்ளும் நிலை
மனித கழிவுகளை மனிதரே அள்ளும் அவலம் மாற புதிய கருவிகளை வழங்கினார். அதுமட்டுமல்லாமல் கொரோனா நிவாரணத்தை அதிகபடியாக அரசுக்கு வசூலித்தும் கொடுத்தார். இத்தனை பங்காற்றிய உதயநிதி இன்று கட்சியில் தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்து ஒரு தலைவராக உருவெடுத்து வருவதாகவே தொண்டர்கள் பார்க்கிறார்கள்.
Recommended Video

ஸ்டாலினுக்கு வணக்கம்
இதை முன் வைத்து இன்று பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னர் முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக எம்எல்ஏக்கள் வணக்கம் சொன்னது போல் உதயநிதியின் இருப்பிடத்திற்கும் வந்து வணக்கம் சொல்லிவிட்டு சென்றனர். இதற்கு காரணம் உதயநிதியின் செயல்பாடுகளும் முன்னெடுப்புகளும் என சொல்லப்படுகிறது. எனினும் கட்சியில் பல ஆண்டுகளாக கருணாநிதியுடன் பயணித்தவர்கள் இருக்க, இவருக்கு ஸ்பெஷல் மரியாதை கொடுப்பதுதான் திமுகவின் சாதனை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications