Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொத்து வரி கட்டாதவர்களுக்கு என்ன ஆகும்? வீட்டையே பறிமுதல் செய்யலாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பல காரணங்களால் இந்த வரியை செலுத்த தவறுபவர்கள் எதிர்கொள்ளும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மிகக் கடுமையானவை என்பதை பலரும் உணர்வதில்லை. குறிப்பாக, சொத்து வரி கட்டாவிட்டால் வீட்டைப் பறிமுதல் செய்ய முடியுமா? என்ற கேள்விக்கு, ஆம், அதற்கான சட்ட அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உண்டு என்பதே நிதர்சனமான உண்மை. அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடத்தின் பரப்பளவு மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ப சொத்து வரியைச் செலுத்தி வருகின்றனர். சாலை வசதி, தெருவிளக்கு, குப்பை மேலாண்மை போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக வசூலிக்கப்படும் இந்த வரி, உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய வருவாய் ஆதாரமாகும்.

Property Tax

சொத்து வரி

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடத்தின் பரப்பளவு மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ப சொத்து வரியைச் செலுத்தி வருகின்றனர். சாலை வசதி, தெருவிளக்கு, குப்பை மேலாண்மை போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக வசூலிக்கப்படும் இந்த வரி, உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய வருவாய் ஆதாரமாகும்.

சொத்து வரியை செலுத்த தவறும்போது, முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும். அதில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரியைச் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படும். அந்த காலக்கெடுவை மீறும்போது, வரியுடன் சேர்த்து அபராதத் தொகையும் கணக்கிடப்படும்.

இந்த அபராதம் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத வட்டியாக ஏறிக்கொண்டே போகும். இதையும் கவனிக்க தவறினால், ஜப்தி நடவடிக்கைகளுக்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கும்.

அசையும் சொத்துகள்

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி, வரி பாக்கி வைத்துள்ளவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு உரிமை உண்டு. ஆரம்பத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் அல்லது வாகனங்களை ஜப்தி செய்யும் நிலை ஏற்படலாம்.

எனினும், மிகப்பெரிய தொகையை நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருப்பவர்கள் மீது அசையாச் சொத்து மீதான நடவடிக்கை பாயும். அதாவது அந்த வீட்டை அல்லது நிலத்தை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை மாநகராட்சி வெளியிடலாம். வீட்டின் வாசலில் 'இந்தச் சொத்து வரி பாக்கிக்காக ஜப்தி செய்யப்பட்டுள்ளது' என்ற அறிவிப்புப் பலகையை வைப்பது உரிமையாளருக்குப் பெரும் சமூக அவமானத்தையும், சட்டச் சிக்கலையும் ஏற்படுத்தும்.

வரி வசூல் - பலன்கள்

மேலும், சொத்து வரி கட்டாதவர்களின் குடிநீர் இணைப்பு மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்புகளைத் துண்டிப்பதற்கும் சட்டத்தில் இடமுண்டு. அடிப்படை வசதிகளின்றி ஒரு வீட்டில் வசிப்பது என்பது இயலாத காரியம் என்பதால், இதன் மூலம் வரி வசூலைத் தீவிரப்படுத்துவார்கள்.

சமீபகாலமாக, வங்கி கணக்குகளை முடக்குவது போன்ற நவீன கால நடவடிக்கைகளையும் சில மாநகராட்சிகள் ஆலோசித்து வருகின்றன. வரி செலுத்தாத கட்டிடங்களுக்கு சீல் வைப்பதும், அதன் மூலம் அந்தச் சொத்தை உரிமையாளர் பயன்படுத்த முடியாமல் முடக்குவதும் நடைமுறையில் உள்ள ஒரு தண்டனைதான்.

எனவே, சொத்து வரியை சுமையாகக் கருதாமல், அரசு வழங்கும் சலுகைகளைப் பயன்படுத்தி முன்கூட்டியே செலுத்துவதே புத்திசாலித்தனம். ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களின் முதல் 15 நாட்களுக்குள் வரியைச் செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

வீடு ஜப்தி ஆகுமா

இதைத்தவிர்த்து, மெத்தனமாக இருந்துவிட்டு பின்னாளில் அபராத வட்டியுடனும், ஜப்தி பயத்துடனும் வரியைச் செலுத்துவது தேவையற்ற மன உளைச்சலையே தரும். உங்கள் கனவு இல்லத்தைப் பாதுகாக்க, உரிய நேரத்தில் வரியைச் செலுத்தி சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதே ஒரே வழி.

சொத்து வரியை உரிய காலத்திற்குள் செலுத்துபவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் மிகவும் லாபகரமானவை.. குறிப்பாக, ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும், அதாவது ஏப்ரல் 15ம் தேதிக்குள் மற்றும் அக்டோபர் 15ம் தேதிக்குள் தங்கள் வரியைச் செலுத்தும் நேர்மையான வரி செலுத்துவோருக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

சொத்து வரி செலுத்துவோருக்கு சலுகைகள்

இந்த சலுகை அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை ஒருவருக்கு லாபத்தைத் தரும் என்பதால், ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆப் வழியாகவோ முன்கூட்டியே வரி செலுத்துவது பணத்தை மிச்சப்படுத்த உதவும்.. டிஜிட்டல் முறையில் வரி செலுத்தும்போது அதற்கான ரசீது உடனடியாகக் கிடைப்பதோடு, அலுவலகங்களுக்கு அலைந்து நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியமும் இருக்காது..

தொடர்ச்சியாக 10 வருடங்கள் அல்லது அதற்கும் மேலாகச் சொத்து வரி கட்டாமல் இருந்தால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானவை.. வரி நிலுவையில் இருக்கும் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரை அபராத வட்டி கணக்கிடப்படும்.. இதனால் ஆரம்பத்தில் சில ஆயிரம் ரூபாயாக இருக்கும் வரித் தொகை, பத்து ஆண்டுகளில் அசல் தொகையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக உயர்ந்துவிடும்.

இவ்வளவு பெரிய தொகையை ஒரே நேரத்தில் செலுத்த முடியாமல் போகும்போது, அந்தச் சொத்தின் மீது சட்டப்பூர்வமான வில்லங்கம் ஏற்படும்.. இதனால் அந்த வீட்டை விற்பனை செய்யவோ அல்லது அடமானம் வைத்து வங்கி கடன் பெறவோ முடியாத நிலை ஏற்பட்டு, உரிமையாளரின் நிதி சுதந்திரம் முற்றிலுமாக முடக்கப்படும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+