Tambaram: தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் பட்டப்பகலில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய முதியவர்.. அடுத்து நடந்த தரமான சம்பவம்
சென்னை: தாம்பரம் பேருந்து நிலையில் ஷேர் ஆட்டோவுக்காக நின்று கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு 50 வயது நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இளைஞரை கன்னத்தில் பளார் என அறைந்தார். தொடர்ந்து தப்பி செல்ல முயன்ற அவரை அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முடிச்சூர் செல்வதற்காக தாம்பரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அவரது தாயும் உடன் இருந்ததால் ஷேர் ஆட்டோவில் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
அப்போது 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அந்த இளம்பெண்ணின் அருகே வந்தார். அப்போது இளம்பெண்ணை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அந்த நபரை கன்னத்தில் பளார்.. பளார் என மாறி மாறி அறைந்தார். மேலும் அவரது சட்டையை பிடித்து எங்கே தப்பி செல்ல பார்க்கிறாய்.. என பிடித்து வைத்தார்.
ஏன் இப்படி செய்தாய் என்று கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த பயணிகளும் என்ன நடந்தது என கூற தொடர்ந்து இளம்பெண் நடந்ததை கூறினார். மேலும் போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லி அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.
மது போதையில் செய்துவிட்டதாக மன்னிப்பு
எனினும் அங்கு வந்த பெண் போலீசாரிடம் பயணிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், உளுந்தூர் பேட்டையை சேர்ந்தவர் என்பதும், தாம்பரம் அருகே அறை எடுத்து தங்கி வசித்து வருகிறாராம். சமையல் வேலை செய்து வருகிறாராம்.
போதையில் தெரியாமல் செய்துவிட்டதாக அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதன் பின்னர் 'இனி இது போல் செய்ய மாட்டேன் என சொல்லி இளம்பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தனர்'. பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
மனைவி ஊருக்கு போன நேரத்தில்..வீட்டுக்கு வந்த கள்ளகாதலி! ப்ரிட்ஜில் நினைத்துப் பார்க்க முடியாத காட்சி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications