சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று உலக மக்கள் தொகை தினம்... ஏன்... எதற்கு... தலைவர்களின் வாழ்த்துக்கள்!!

Google Oneindia Tamil News

சென்னை: இன்று உலக மக்கள் தொகை தினம். கடந்த ஆண்டுகளில் நாம் பார்த்த உலக மக்கள் தொகை தினத்தை விட நடப்பாண்டில் நாம் கொண்டாடும் மக்கள் தொகை தினம் வித்தியாசமானது. மனித உரிமைகளை கொரோனா பறித்துள்ளது. ஆதலால்தான், ''மனித உரிமைகளை தனிமைப்படுத்த முடியாது'' என்று ஐநா குறிப்பிட்டுள்ளது.

உலக மக்கள் தொகை தினத்தில் ''மக்கள் தொகை பெருக்க கட்டுப்பாடு'', ''குடும்ப கட்டுப்பாடு'' போன்றவை குறித்து பேசும் நிலையில் இன்று உலகம் இல்லை, மக்களும் இல்லை. முழு கவனமும் சுகாதாரத்தில் உலக நாடுகள் அக்கறை செலுத்த வேண்டும், இந்த துறையில் போதிய தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற உந்துதலை, பாடத்தை உணர்த்தியுள்ளது.

மருத்துவர்களுக்கு நேர்ந்த அவலம்... காருக்குள் தலையை நுழைத்து இருமிய கொரோனா நோயாளிகள்...!!மருத்துவர்களுக்கு நேர்ந்த அவலம்... காருக்குள் தலையை நுழைத்து இருமிய கொரோனா நோயாளிகள்...!!

உலக மக்கள் தொகை தினம்:

உலக மக்கள் தொகை தினம்:

உலக மக்கள் தொகை 1987, ஜூலை 11ஆம் தேதி ஐந்து பில்லியன் என்ற அளவை எட்டியது. இதையடுத்து உலக மக்கள் தொகை தினம் கொண்டாட வேண்டும் என்ற பரிந்துரையை ஐநா வைத்தது. இதை முன்னிட்டு, 1989ல் உலக மக்கள் தொகை தினம் கொண்டாட ஐநா முடிவு செய்து கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்டோனியோ குட்டரெஸ்:

அன்டோனியோ குட்டரெஸ்:

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் விடுத்து இருக்கும் செய்தியில், ''கோவிட் 19 அனைவரையும் பாதித்துள்ளது. ஆனால், சமமாக இல்லை. குறிப்பாக பெண்களிடம் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை, பாதிப்புகளை இது மிகவும் ஆழமாக்கி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பெண்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் அவர்களுக்கு எதிரான சம்பவங்கள் உடல் ரீதியாக, மன ரீதியாக அரங்கேறுகிறது. நடப்பாண்டில் 4 மில்லியன் பெண்களின் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது. 12 மில்லியன் பெண்களுக்கு கட்டாயத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம் மேலும் சிக்கல்களை உருவாக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது '' என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைவர்களின் பெண்கள் தின வாழ்த்துக்கள்:

தலைவர்களின் பெண்கள் தின வாழ்த்துக்கள்:

பெண்களுக்கு சிறந்த கல்வி கொடுக்க வேண்டும். அதிகாரம் கொடுக்க வேண்டும். இதை எட்டும்போது, சமுதாயத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படும், ஏற்றத்தாழ்வுகள் நீங்கும்: அல் கோர், முன்னாள் அமெரிக்க துணை அதிபர்

''முன்பு பெண்கள் தங்களுக்கு குழந்தைகள் வேண்டாம் என்றும் அதனால் தாங்கள் விலக்கப்படுவார்கள் என்றும் பயந்து வந்தனர். ஆனால், இன்று துணிந்து வேண்டாம் என்று கூறும் அளவிற்கு சென்றுள்ளனர். மாற்றம் ஏற்பட்டுள்ளது'': கேமரூன் டியாஸ், நடிகர்

''மக்கள் தொகை வளர்ச்சி என்பது நிலையான வளர்ச்சிக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இது பெண்களுக்கு சம அதிகாரம் மற்றும் கல்வி அளிப்பதாகவும் இருக்க வேண்டும்'':கோஃபி அன்னன், ஐநா முன்னாள் பொதுச்செயலாளர்

''மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்"
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்... பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால்... பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்" - முண்டாசு கவிஞர் பாரதியார்

Recommended Video

    எல்லோருக்கும் கொரோனா சோதனை... சீனா எடுத்த அதிரடி முடிவு
    உலக மக்கள் தொகை:

    உலக மக்கள் தொகை:

    இன்று உலக மக்கள் தொகையில் ஐந்து நாடுகளின் மக்கள் தொகை மட்டும் 43 சதவீதமாக இருக்கிறது. சீனாவில் 138 கோடி மக்கள் தொகை உள்ளது. உலக மக்கள் தொகையில் 18.3 சதவீதம் இந்த நாட்டில் உள்ளது. அடுத்தது இந்தியா உள்ளது. இந்தியாவில் 132 கோடி மக்கள் உள்ளனர். உலக மக்கள் தொகையில் 18 சதவீதம் இங்கு உள்ளனர்.

    அமெரிக்கா 32.5 மில்லியன் மக்கள் தொகையுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதையடுத்து 26.18 கோடி மக்கள் தொகையுடன் இந்தோனேஷியா நான்காம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 21 கோடி மக்கள் தொகையுடன், ஐந்தாம் இடத்தில் உள்ளது. உலக மக்கள் தொகையில் 2.76 சதவீதம் பாகிஸ்தானில் உள்ளனர்.

    English summary
    World population day...history Quotes Wishes
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X