Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீ போலீசா? ஸ்விக்கி "பாயை" அடித்த போலீஸ்.. டக்குனு போனை போட்ட சைலேந்திர பாபு.. அடுத்து நடந்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் போக்குவரத்து காவல் அதிகாரியால் தாக்கப்பட்ட ஸ்விக்கி ஊழியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர் நலம்பெற வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு.

Recommended Video

    Swiggy ஊழியரை தாக்கிய Police.. போனில் நலம் விசாரித்த DGP Sylendra Babu #Viral

    கோவை பீளமேடு போக்குவரத்து காவலர் சதீஷ், ஸ்விக்கி பணியாளர் மோகன சுந்தரத்தை கன்னத்தில் அறைந்த நிகழ்வு தமிழ்நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை நீலம்பூர் பகுதி வழியாக சென்ற பள்ளி வாகனம் ஒன்று, அங்கு ஒரு பெண்ணை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்று இருக்கிறது. இதில் அந்த பெண் பலத்த காயம் அடைந்தார்.

    இதையடுத்து அதே வழியாக சென்ற ஸ்விக்கி ஊழியர் மோகன சுந்தரம், அந்த பள்ளி வாகனத்தை துரத்தி சென்று விசாரித்து உள்ளார்.

     என்ன நடந்தது?

    என்ன நடந்தது?

    ஏன் இப்படி இடிச்சிட்டு போனீங்க.. ஏன் வேகமாக போனீங்க என்று விசாரித்து இருக்கிறார். இந்த நிலையில் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே அந்த இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல் அதிகாரி சதீஷ்.. பள்ளி வாகனம் இடிச்சிட்டு போனா அதை தட்டிக்கேட்க நான் இருக்கேன். நீ யார் அதை கேட்க என்று ஸ்விக்கி ஊழியர் மோகன சுந்தரத்தை அடித்து இருக்கிறார்.

    நீ என்ன போலீசா

    நீ என்ன போலீசா

    நடு ரோட்டில் வைத்து மோகன சுந்தரத்தை போலீசார் மோசமாக தாக்கி இருக்கிறார். நான் இருக்கேன் இதை கேட்க.. நீ என்ன போலீசா என்று கேட்டு மாறி மாறி அந்த இளைஞரை போலீசார் தாக்கி இருக்கிறார். இந்த கொடூரமான சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலானது. இதில் மோகன சுந்தரத்தின் போனையும், சாவியையும் போலீசார் பிடிங்கி வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையம் முழுக்க தீவிரமாக பரவியது.

    மோகன சுந்தரம்

    மோகன சுந்தரம்

    இதையடுத்து மோகன சுந்தரம் சார்பாக உடனடியாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து காவலர் சதீஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட. அவருக்கு எதிராக வழக்கும் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டார். தற்போது சதீஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் காவல் ஆணையரின் இந்த வேகமான நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. போலீசார் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    கோவை சைலேந்திர பாபு

    கோவை சைலேந்திர பாபு

    இந்த நிலையில்தான் கோயம்புத்தூரில் போக்குவரத்து காவல் அதிகாரியால் தாக்கப்பட்ட ஸ்விக்கி ஊழியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர் நலம்பெற வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு., இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை பீளமேடு போக்குவரத்து காவலர் சதீஷ், ஸ்விக்கி பணியாளர் மோகன சுந்தரத்தை கன்னத்தில் அறைந்த நிகழ்வு குறித்த விசாரணை நடத்தப்பட்டது. காவலர் மீது கிரிமினல் மற்றும் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மோகன சுந்தரத்தை தொலை பேசியில் தொடர்பு கொண்டு நடவடிக்கையை தெரிவித்து அவர் நலம்பெற வாழ்த்தினேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+