மேட்டுப்பாளையம் அருகே லாரி மோதி அரசு பஸ் கவிழ்ந்து விபத்து - 10 பேர் காயம்
அரசுப்பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே அரசுப் பேருந்து மீது வேகமாக வந்த லாரி மோதியதில் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்துக்குள் இருந்த 10 பேர் காயமடைந்தனர். பேருந்து மீது லாரி மோதிய போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
Recommended Video
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளுடன் இன்று காலை சத்தியமங்கலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று கிளம்பியது.

அப்போது அந்த பஸ், சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு 3 பிரிவு சந்திப்பு பகுதியில் சென்ற போது எதிரே தென் திருப்பதியில் இருந்து வந்த சரக்கு லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் அரசு பேருந்து கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசுப்பேருந்து மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. லாரி வருவதைப்பார்த்து நின்று பின்னர் மெதுவாக வந்தது பேருந்து. எதிர்பாராத விதமாக மறைவாக இருந்த சாலையில் இருந்து வேகமாக வந்த லாரி பேருந்து மீது சடாரென்று மோதியது. அதில் நிலை தடுமாறிய பேருந்து ஒரு பக்கமாக கவிழ்ந்தது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து பேருந்துக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் சிறுமுகை காவல் நிலையத்திற்கும், ஆம்புலன்ஸ்க்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை காவல்நிலைய காவலர்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த அனைவருக்கும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் விபத்து குறித்து சிறுமுகை காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications