தமிழகம்தான் இதில் பெஸ்ட்.. 'முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி'.. திடீரென பாராட்டிய வானதி.. என்ன விஷயம்?
கோவை: சுகாதாரத் துறையில் தமிழகம் சிறந்து விளங்கி வருவதாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் தெரிவித்தார். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அப்போது நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஒரே நாளில் 11 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படுகிறது என்று மோடி பெருமிதம் தெரிவித்தார்.இதில் நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் திறந்து வைத்துள்ளார் என்று பெருமையாக கூறினார். இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன் சுகாதாரத் துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக பாராட்டினார். இதில் மைல் கல்லாக தமிழகத்தில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. இந்தியாவிலேயே 12 சதவீத மருத்துவ இடங்கள் இங்கு உள்ளன என்றும் கூறினார்.

நல்ல மருத்துவ வசதி கிடைக்கிறது
இதேபோல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட வானதி ஒவ்வொரு கிராம மக்களுக்கும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே நல்ல மருத்துவ வசதி கிடைக்கிறது என்றும் தெரிவித்தார். அப்போது நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

நீட் தேர்வு கட்டாயம்
இதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், தமிழகத்துக்கு நீட் தேர்வு கட்டாயம் வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவே நீட் தேர்வுக்கு திமுக அரசு விலக்கு கேட்கிறது என்று கூறினார். புதிதாக உருவான மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார்.
Recommended Video

பாஜக முயற்சி செய்யும்
தமிழக பாஜக அதற்கான முயற்சிகளை செய்யும் என்று பேசிய வானதி தமிழகத்தில் மருத்துவ இடங்கள் 6,000-ல் இருந்து, 10,000 ஆக உயர்ந்துள்ளன. இதில், 7.5 சதவீதம் ஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு செல்கின்றன என்றும் தெரிவித்தார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications