கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செல்போன் மூலம் கொரோனாவுக்கான ஸ்வாப் சேம்பிளை கலெக்ட் செய்யும் ரோபோ.. கோவை இளைஞரின் செம வடிவமைப்பு

Google Oneindia Tamil News

கோவை: கொரோனா வைரஸுக்கான பரிசோதனை நேரடியாக எடுக்கப்படுவதால் அதன் பாதிப்புகள் அதிகரிக்கும் நிலையில் ரோபோ மூலம் தொண்டை சளி மாதிரியை எடுக்கும் கருவியை கோவை இளைஞர் கார்த்தி வேலாயுதம் உருவாக்கியுள்ளார்.

Recommended Video

    கொரோனா சோதனைக்கு சளி மாதிரி எடுக்கும் ரோபோ: அரசு உதவிக்காக காத்திருக்கும் இளைஞர்!

    பொதுவாக கொரோனா வைரஸை கண்டறிய தொண்டையில் உள்ள சளி மாதிரியையும் மூக்கினுள் உள்ள சளி மாதிரியையும் காது குடையும் பட்ஸ் போல் பஞ்சு சுற்றப்பட்ட ஒரு குச்சியில் எடுத்து சோதனை செய்வது வழக்கம்.

    இவ்வாறு சோதனை செய்யும் போது சுகாதாரத் துறை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள், மாஸ்க், கை உறை ஆகியவற்றை அணிந்து கொண்டிருப்பார். அவ்வாறு செய்யும் போது கிருமி தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது.

    ஒரு முறை இரு முறையல்ல.. 80 முறை துவைத்து பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்கள்.. கோவையில் அசத்தல் ஒரு முறை இரு முறையல்ல.. 80 முறை துவைத்து பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்கள்.. கோவையில் அசத்தல்

    கைகளை வெளியே நீட்டி

    கைகளை வெளியே நீட்டி

    இதையடுத்து கண்ணாடி சுவர் எழுப்பப்பட்ட ஒரு அறையில் வெளிப்புறமாக கைகளை போல் வடிவமைக்கப்பட்ட ரப்பர் கிளவுஸில் கைகளை விட்டபடி வெளியே இருக்கும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வசதி வந்துள்ளது. இதனால் சளி மாதிரி எடுப்போரின் எந்த உடல் பாகமும் கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருக்காது.

    கியாஸ்க்

    கியாஸ்க்

    சுற்றிலும் கண்ணாடியால் கட்டமைக்கப்பட்டிருக்கும் கியாஸ்க் போன்ற ஒரு அறையாகும். இது பெரும்பாலான இடங்களில் வந்துவிட்டது. எனினும் இன்னும் பல இடங்களில் நேரடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலமும் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

    கிளவுஸ்

    கிளவுஸ்

    என்னதான் பாதுகாப்பு உபகரணங்கள், கிளவுஸ் போட்டிருந்தாலும் சுவாசிப்பதன் மூலம் அந்த கிருமி எளிதில் பரவும் என சொல்லப்படுகிறது. இதனால் கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரோபோ மூலம் சளி மாதிரியை எடுக்கும் கருவியை வடிவமைத்துள்ளார்.

    ரூ 2000 செலவு

    ரூ 2000 செலவு

    கோவையைச் சேர்ந்தவர் கார்த்தி வேலாயுதம். இவர் ரோபாட்டிக்ஸ் பொறியாளர். இவர்தான் அந்த ரோபோவை வடிவமைத்துள்ளார். இந்த ரோபோ நோயாளியின் தொண்டை மாதிரியை சேகரிக்கும். இதை ஒரு ஸ்மார்ட் போன் செயலி மூலம் இயக்கலாம். இந்த முன்மாதிரி கருவியை உருவாக்க ரூ 2000 செலவானது என கார்த்தி கூறுகிறார்.

     2 நிமிடங்கள்

    2 நிமிடங்கள்

    இதுகுறித்து கார்த்தி கூறுகையில் சளி மாதிரியை எடுக்க 2 நிமிடங்கள் ஆகும். தற்போது தொண்டை, மூக்கு சளி மாதிரிகள் நேரடியாக பணியாளர்களால் எடுக்கப்படுகிறது. அது மிகவும் ஆபத்தானது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவும். இந்த ரோபோவை செல்போன் செயலி மூலம் இயக்குவதால் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க தானியங்கி தன்மை கொண்டது. இவற்றை மருத்துவமனைகள் மற்றும் நகரும் வாகனங்களில் கொண்டு சென்று பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

    English summary
    Coimbatore Robotics Engineer Karthi Velayutham developed covd 19 smart swab robot at a rate of Rs 2000.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X