வங்கி கணக்கு முடங்கினால்.. செய்ய வேண்டியது என்ன.. கோவை சைபர் கிரைம் போலீசார் விளக்கம்
கோவை: மோசடி நபர்களிடம் இருந்து யாராவது ஒருவரின் வங்கி கணக்குக்கு பணம் வந்தால் அந்த நபரின் வங்கி கணக்கு உடனடியாக முடக்கம் செய்யப்படுகிறது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுத்து பயன்படுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்..இதுபோன்று வங்கி கணக்கை முடக்கம் செய்தால் என்ன செய்வது என்பது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
பகுதிநேர வேலை, ஆன்லைனில் முதலீடு, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக கூறி மோசடிகள் நடப்பது இப்போது அதிகமாகிவிட்டது. அதேபோல் சிலர் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறி, சி.பி.ஐ., என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் வீடியோ காலில் பேசி டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி பணத்தை மோசடி செய்கிறார்கள்.

இதுபோன்ற புகார்கள் தமிழ்நாட்டில் அதிகமாகி வருகிறது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கு அதிக அளவில் புகார்கள் வருகிறது. இதனிடையே மோசடி நபர்களிடம் இருந்து யாராவது ஒருவரின் வங்கி கணக்குக்கு பணம் வந்தால் அந்த நபரின் வங்கி கணக்கு உடனடியாக முடக்கம் செய்யப்படுவதும் அதிகமாக இருக்கிறது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுத்து பயன்படுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். இதுபோன்று வங்கி கணக்கை முடக்கம் செய்தால் என்ன செய்வது என்பது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விளக்கம் அளித்தனர்.
இதுபற்றி அவர்கள் கூறும் போது, சைபர் மோசடியில் ஈடுபடுபவர்கள், நேரடியாக நமது வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டியது இல்லை. யாரோ ஒருவரின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி, அந்த நபர் நமது வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி இருந்தாலும் உடனடியாக முடக்கப்படும்.
மோசடி நபர்கள் அனுப்பும் பணத்தால் சில நேரங்களில் வங்கி கணக்கு முடக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று, எதனால் கணக்கு முடக்கப்பட்டது என்று கேட்க வேண்டும். அவர்கள், எவ்வளவு பணம் வங்கி கணக்குக்கு வந்தது?, யாரிடம் இருந்து வந்தது?, எந்த போலீசார் கணக்கை முடக்கம் செய்தனர் என்ற தகவலை வங்கி அதிகாரிகள் தெரிவிப்பார்கள்.
அந்த தகவலுடன் சைபர் கிரைம் காவல் நிலையத்துக்கு வந்தால், சம்பந்தப்பட்ட போலீசாரின் தொடர்பு எண், புகார்தாரரின் செல்போன் எண், மனு எண் ஆகியவற்றை கொடுப்பார்கள். உடனே போலீசார் எண், மனுதாரரின் எண்ணில் பேசி தங்களுக்கு தொடர்பு இல்லை என்பதை தெரிவித்தால் வங்கி கணக்கை முடக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கி விடுவார்கள். இதுபோன்ற விஷயத்தில் சிக்காமல் இருக்க அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து நமது வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்ப சொல்லக்கூடாது.
குறிப்பாக தெரியாத நபர்கள் யாரிடமாவது இருந்து நமது வங்கி கணக்குக்கு பணம் வந்தால், உடனடியாக வங்கிக்கு சென்று, பணம் வந்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். அந்த பணத்தை நமது வங்கி கணக்கில் இருந்து எடுக்க சொல்ல வேண்டும். இல்லை என்றால் மோசடி நபர்களிடம் இருந்து பணம் வந்து இருந்தால் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்படும்" இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications