ஸ்டாலின் வீழ்த்திய பெரிய விக்கெட்! விக்கித்து போன அதிமுக! கன்ஃபார்மா? விசாரணையில் குதித்த எடப்பாடி
கோயம்புத்தூர்: யார் அந்த 3 பேர்.. யார் அந்த 3 எம்எல்ஏக்கள்.. இதுதான் தற்போது அதிமுகவில் நிலவும் மிகப்பெரிய கேள்வி. நேற்று வெளியான ஒரு செய்திக்கு பின்பாக அதிமுகவின் டாப் தலைகள் பலரும் தீவிரமான விசாரணைகளை நடத்தி வருவதாக ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள். அப்படி என்ன நடந்தது?
அதிமுக பொதுக்குழு வழக்கில் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம் என்ற நிலை உள்ளது. பெரும்பாலும் நாளையே இந்த வழக்கில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் அதிமுகவில் நிலவும் தொடர் மோதல்களால் பல்வேறு நிர்வாகிகள், தலைவர்கள் கடும் அப்செட்டில் இருக்கிறார்கள். மூத்த தலைவர்கள் மாறி மாறி சண்டை போட்டுக்கொள்வதை அதிமுகவின் அடிமட்ட நிர்வாகிகள் விரும்பவில்லை.
இதன் காரணமாகவே சமீபத்தில் அதிமுக நிர்வாகிகள் பலர் முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியுடன் சேர்ந்து திமுகவில் திடீரென ஐக்கியம் ஆனார்கள்.

மோதல்
ஒரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் பற்றிய உண்மைகளை ஜெயக்குமார் சொல்கிறார். இன்னொரு பக்கம் சிவி சண்முகம் பற்றிய உண்மைகளை ஓ பன்னீர்செல்வம் சொல்கிறார். இப்படி மாறி மாறி நிர்வாகிகள் மோதிக்கொள்கிறார்கள். இதனால் அடிமட்ட நிர்வாகிகள்.. என்னங்க இது? எங்களை வழி நடத்த வேண்டிய அவர்களே இப்படி ஈகோவோடு சண்டை போட்டால் எப்படி? இவர்கள் சண்டை போட்டால் கட்சியை யார் வழி நடத்துவது? கட்சியை யார் பார்த்துக்கொள்வது என்று கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர்.

அப்செட்
இந்த அப்செட்டை எல்லாம் பயன்படுத்திதான் அதிமுகவில் உள்ள 3 எம்எல்ஏக்களை அப்படியே தூக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி 3 அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்த சில நாட்களில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளனர். முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இவர்கள் ஆதரவு தர உள்ளனர். முன்னதாக தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்த போது அதிமுகவுடன் கடுமையான மோதல் வந்தது. இந்த மோதலை தொடர்ந்து பல தேமுதிக எம்எல்ஏக்கள் வரிசையாக சென்று ஜெயலலிதாவை சந்தித்தனர்.

ஜெயலலிதா
ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் அதிமுகவில் இணையவில்லை. தகுதி நீக்கத்தை தடுக்கும் வகையில் ஆக்கபூர்வமற்ற முறையில் இவர்கள் அதிமுகவிற்கு ஆதரவு தந்தனர். தற்போது அதே ஸ்டைலில் மூன்று அதிமுக எம்எல்ஏக்களை ஸ்டாலின் தட்டி தூக்க இருக்கிறார். கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது செந்தில் பாலாஜி இவர்கள் 3 பேரும் திமுக பக்கம் வருவதை முதல்வர் ஸ்டாலினிடம் உறுதி செய்துள்ளார்.

சந்திப்பார்கள்
இவர்கள் மூவரும் இன்னும் சில நாட்களில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார்கள். அதிகாரபூர்வமற்ற திமுக எம்எல்ஏக்களாக இவர்கள் செயல்படுவார்கள். இவர்கள் மூன்று பேருமே கோவையை சேர்ந்தவர்கள். அங்கு உள்ள 10 அதிமுக எம்எல்ஏக்களில் எடப்பாடிக்கு நெருக்கமான 3 பேர்தான் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு செல்ல உள்ளனர். இதில் சிலர் எடப்பாடிக்கு மிக மிக நெருக்கமாக இருந்த தலைகள் என்றும் கூறப்படுகிறது.

விசாரணை
இந்த நிலையில்தான் அதிமுகவில் இருந்து திமுக பக்கம் சாய போகும் அந்த 3 பேர் யார் என்று எடப்பாடி விசாரணையில் குதித்து உள்ளார். அதிமுகவில் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது என்பது எடப்பாடிக்கு தெரியும். இதை தடுக்கவே அவர் தீவிரமாக முயன்று வந்தார். ஆனால் அவர் எதிர்பார்க்காத வகையில் திமுக உள்ளே புகுந்து எம்எல்ஏக்களை தட்டி தூக்கி உள்ளது. இந்த 3 பேரையும் கண்டுபிடித்து, அவர்களை தக்க வைப்பதற்கான கடைசி கட்ட முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
-
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications