கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திமிர்ப் பேச்சு

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

கொழும்பு: "இப்பதான் ஒரு சந்தோஷமான செய்தி கிடைச்சிருக்கு.. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல் படை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும், அத்துமீறுவதும் பல வருஷமாக தொடர் கதையாக நடந்து வரும் செயலாகும்.. மத்திய, மாநில அரசுகள் தலையீட்டால் மட்டுமே அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.. மற்றபடி இந்த பிரச்சனைக்கு இதுவரை ஒரு தீர்வும் காணப்படவில்லை.

 Srilankan Minister Douglas Devandas controversial speech

நேற்றுகூட, ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 600க்கும் மேற்பட்ட படகுகளில் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்... அப்போது திடீரென அங்கு வந்த சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி எறிந்தது.. கையில் இருந்த கண்ணாடி பாட்டில்களையும் வீசி கண்மூடித்தனமாக மீனவர்களை தாக்கியது.

இதனால் நிலைகுலைந்து போன மீனவர்கள், உடம்பெல்லாம் காயமடைந்தனர்.. பிழைப்புக்காக வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் எல்லாம் சேதம் ஆகிவிட்டன. இப்படித்தான் ஒருவாரத்துக்கு முன்பும் இதேபோல ஒரு அட்டூழியம் நடந்தது.

இந்த சமயத்தில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து இலங்கை கடல்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சையான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்... அவர் சொல்லும்போது, "இந்திய மீனவர்கள் மீது இலங்கை கப்படல் படைதாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.. இப்பதான் ஒரு சந்தோஷமான செய்தி கிடைச்சிருக்கு

அதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்!அதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்!

நான் ஏற்கனவே இந்திய தரப்புக்கு ஜனாதிபதிக்கு, பிரதமருக்கு கடற்படை தளபதிக்கு, எல்லாருக்கும் சொன்னேன், மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் என்று.. அப்படி கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், இந்திய-இலங்கை மீனவர்களிடையே மோதல் கண்டிப்பாக உருவாகும்... கடல்ல சண்டை தொடங்கும்னு சொன்னேன்" என்று தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பான பிரச்சினைக்கு ஒரு தீர்வை காண்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், நம் முதல்வருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படி மிரட்டல் விடுக்கும் வகையிலும், பொறுப்பற்ற முறையிலும் பேசியுள்ள டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

English summary
Srilankan Minister Douglas Devandas controversial speech
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X