கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கையில் உள்ளாடை போராட்டம்- நாடாளுமன்றத்துக்குள் பதற்றம்- வெளியே கண்ணீர்புகை தாக்குதல்!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் ராஜபக்சேக்கள் பதவி விலக வலியுறுத்தி உள்ளாடைகளை முன்வைத்து போராட்டக்காரர்கள் இன்று போராட்டம் நடத்தினர். அத்துடன் நாடாளுமன்றத்துக்குள் சபாநாயகரின் செங்கோலை பறிக்க முயன்ற சம்பவத்தால் பதற்றம் நிலவியது.

இலங்கையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று சுமார் 2,000 தொழிற்சங்கங்கள் பங்கேற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகள், கல்வி நிறுவனங்களில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டன.

 Underwear protest near Sri Lanka Parliament today

இந்நிலையில் கொழும்பில் போராட்டக்காரர்கள் உள்ளாடைகளை முன்வைத்து போராட்டத்தை நடத்தினர். உள்ளாடைகளில் தங்களது கோரிக்கைகளை எழுதி போலீஸ் தடுப்புகளில் தொங்கவிட்டனர். இதனால் காலை முதலே பெரும் பரபரப்பு நிலவியது.

 Underwear protest near Sri Lanka Parliament today

இந்நிலையில் ராஜபக்சேக்கள் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தினர். அப்போது சபாநாயகரின் செங்கோலை பறிக்க சில எம்.பிக்கள் முயற்சித்தனர். இந்த களேபரத்தின் போது நாடாளுமன்ற பாதுகாவலர்கள் சிலர் தாக்கப்பட்டனர்.

 Underwear protest near Sri Lanka Parliament today

மேலும் இலங்கை நாடாளுமன்றத்தின் முன்பாக பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசியதால் பதற்றம் நிலவியது. மாணவர்கள் மீதான இத்தாக்குதலுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

 Underwear protest near Sri Lanka Parliament today

இதனிடையே கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அனுமதி வழங்காதுவிட்டால் சபாநாயகரின் வீட்டை முற்றுகையிடுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் லக்ஸ்மன் கிரியெல்ல பேசுகையில், கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அனுமதி வழங்காது விட்டால் சபாநாயகரின் வீட்டை முற்றுகையிட உள்ளோம். அவரை சிறைபிடிப்போம். நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஒத்திவைக்க சபாநாயகர் முயற்சிக்கின்றார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதிலாக நாளினை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

English summary
Male and female underwear had been displayed on the Police barricades set up near the Srilanka Parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X