இனி ரொம்ப ஈசி.. ஒரே சிப்தான்.. வருகிறது இ பாஸ்போர்ட்.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!
டெல்லி: வெளிநாடு செல்வோருக்கு இ பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Recommended Video
மத்திய பட்ஜெட் 2022ஐ இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் டிஜிட்டல்மயமாக்கம் குறித்த முக்கிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். பல்வேறு துறைகளில் புதிய டிஜிட்டல் பயன்பாடுகள், சேவைகளை நிதி அமைச்சர் இன்று அறிமுகப்படுத்தினார்.

பட்ஜெட்
அதில், நாடு முழுக்க நில ஆவணங்களை சரிபார்க்க டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்ட டிரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தம். ட்ரோன் தயாரிப்பை ஊக்குவிக்க முன்னுரிமை வழங்கப்படும். ஒரு வகுப்பு ஒரு கல்வி அடிப்படையில் 100 டிவி சேனல்கள் தொடங்கப்படும். பள்ளிகளில் கல்வி கற்பித்தலை மேம்படுத்த உயர்தர மின்னணு வழி கல்வி முறை அறிமுகம் செய்யபப்டும். இதனால் கல்வி நிறுவனங்கள் டிஜிட்டல் வகுப்புகளுக்கு மாறும்.

டிஜிட்டல்
டிஜிட்டல் பல்கலைக் கழகம் அமைக்கப்படும். மின்னணு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு, பள்ளிகளுக்கு இணைப்பு வழங்க திட்டம் கொண்டு வரப்படும். இதனால் மாணவர்கள் எளிதாக உயர் கல்விகளில் சேர முடியும். அதேபோல் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் பணபரிவர்த்தனை மையங்கள் தொடங்கப்படும். வரும் காலங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள இது உதவியாக இருக்கும்.

அஞ்சலக வங்கிகள் இணைப்பு
மேலும் நாடு முழுவதும் 1.5 லட்சம் அஞ்சலக வங்கிகள் இணையம் மூலம் இணைக்கப்படும். வெளிநாடு செல்வோருக்கு இ பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இப்போது இருக்கும் பாஸ்போர்ட் முறை நடைமுறையில் இருந்தாலும், ஏடிஎம் கார்ட் போன்ற தோற்றம் கொண்ட டிஜிட்டல் இ பாஸ்போர்ட் கொண்டு வரப்படும், என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இ-பாஸ்போர்ட்
நடப்பு நிதி ஆண்டிலேயே இந்த இ-பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இ பாஸ்போர்ட் என்பதை பயோ மெட்ரிக் பார்ஸ்போர்ட் என்றும் அழைப்பார்கள். இது பார்க்க ஏடிஎம் கார்ட் போல சிப் கொண்டு இருக்கும். அந்த சிப்பில் உங்கள் விவரங்கள் அடங்கி இருக்கும். மலேசியாவில்தான் முதல் முதலில் இந்த பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. பல நாடுகளில் இந்த பாஸ்போர்ட் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications