சென்னை ஐஐடி-யில் ஜாதி பாகுபாடு..விசாரணை குழு அமைக்க வேண்டும்: லோக்சபாவில் திமுக எம்பி செந்தில்குமார்
டெல்லி: சென்னை ஐஐடி கல்வி நிலையத்தில் ஜாதி பாகுபாட்டால் எஸ்.சி எஸ்.டி மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவதாக திமுக எம்.பி செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
சென்னை ஐஐடி-யில் ஜாதி பாகுபாடு பார்க்கப்படுவதாகவும், அதனால் தான் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும், பேராசிரியர் விபின் பி வீட்டில் தெரிவித்திருந்தார்.
ஜாதி பாகுபாடு குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும், இல்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் பேராசிரியர் விபின்.

எம்.பி செந்தில்குமார்
இந்நிலையில், பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில், திமுக எம்.பி செந்தில்குமார் ஐஐடி பிரச்சனை குறித்துப் பேசியிருக்கிறார். நேற்று பாராளுமன்றத்தில் அவர் பேசுகையில், ''ஐஐடி மெட்ராஸில் பணி நியமனத்தின் போது எஸ்.சி எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினரிடம் ஜாதி பாகுபாடு பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பேராசிரியர் விபின், ஐஐடியில் ஜாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக சொல்லி ராஜினாமா செய்திருக்கிறார்.

ஜாதிய பாகுபாடு
இதேபோல பல ஆசிரியர்களும், மாணவர்களும் ஜாதியின் பெயரால் பாகுபாட்டுக்கு ஆளாவதாக புகார் எழுந்துள்ளது. அதே நேரம் மெட்ராஸ் ஐஐடி கொடுத்துள்ள விளம்பரத்தில் தலித் படிப்புகள் குறித்த விபரங்கள் நீக்கப்பட்டிருக்கிறது. எனவே ஆசிரியர் விபின் கூறியிருக்கும் புகாருக்கு விசாரணை குழு அமைத்திட வேண்டும். அதேபோல் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினர் பணியமர்த்தலில் முறைகேடு நடக்காமல் இருக்க ஆவண செய்யும்படி ஒன்றிய கல்வி அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று பேசினார்.

மெட்ராஸ் ஐஐடி
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது ஜாதி ரீதியிலான தாக்குதல் நடப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. குறிப்பாக மெட்ராஸ் ஐஐடி-யில் கடந்த சில வருடங்களாகத் தற்கொலைச் சம்பவங்களும், மாணவர்கள் பாதியிலேயே படிப்பை விட்டுச் செல்வதும் அதிகரித்தது.
நீதிமன்றமும் மெட்ராஸ் ஐஐடி நிர்வாகத்தை இதற்காக எச்சரித்தது. இந்தியாவில் உள்ள பல ஐஐடி-களின் முன்னாள் மாணவர்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த ஜாதி, மதப் பாகுபாடுகள், பாரபட்சங்கள் குறித்து பொதுவெளியில் பேசத் தொடங்கினார்கள். இந்த நிலையில்தான் ஐஐடி மெட்ராஸில் கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திஃப் தற்கொலை செய்துகொண்டார்.

பேராசிரியர்
மெட்ராஸ் ஐஐடி-யில் கடந்த சில வருடங்களாக சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது ஜாதி ரீதியிலான தாக்குதல் நடப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து, அங்கு தற்கொலைச் சம்பவங்களும், மாணவர்கள் பாதியிலேயே படிப்பை விட்டுச் செல்வதும் அதிகரித்தது. இட ஒதுக்கீட்டின்படி ஐஐடி கல்வி நிலையங்களில் ஏராளமானோர் பணிக்கு தேர்வாகிவருகின்றனர். அவர்களில் 10-ல் 7 பேர் நிர்வாகத்தில் நிலவும் சாதிய ஆதிக்கத்தின் காரணமாகப் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டு, மனதளவில் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மெட்ராஸ் ஐஐடி-யில் கடந்த சில வருடங்களாக சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது ஜாதி ரீதியிலான தாக்குதல் நடப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து, அங்கு தற்கொலைச் சம்பவங்களும், மாணவர்கள் பாதியிலேயே படிப்படி விட்டுச் செல்வதும் அதிகரித்தது. இட ஒதுக்கீட்டின்படி ஐஐடி கல்வி நிலையங்களில் ஏராளமானோர் பணிக்கு தேர்வாகிவருகின்றனர். அவர்களில் 10-ல் 7 பேர் நிர்வாகத்தில் நிலவும் சாதிய ஆதிக்கத்தின் காரணமாகப் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டு, மனதளவில் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

பேராசிரியர் விபின்
ஐஐடி மெட்ராஸில் 2019-ம் ஆண்டு முதல் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்துவந்தவர் விபின் பி வீட்டில். ''நான் பணிக்குச் சேர்ந்ததிலிருந்து என்னுடைய துறையில் ஜாதி ரீதியிலான பாகுபாடுகளை அதிகமாக அனுபவித்துவருகிறேன். ஐஐடி-யில் ஜாதிப் பாகுபாடு தொடர்பான தனிநபர்களின் வழக்குகளை கவனித்து விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். மேலும் அந்தக் குழுவில், எஸ்சி / எஸ்டி கமிஷன், ஓபிசி கமிஷன் மற்றும் பத்திரிகையாளர்கள் போன்றவர்கள் இடம்பெற்றிருக்க இருக்க வேண்டும்" என்று கூறி ராஜினாமா செய்தார். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பிரதமருக்கு கடிதம் எழுதினார் விபின். சென்னை ஐஐடியில் விசாரணை நடத்த வேண்டும், இல்லையென்றால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கடிதம் எழுதியுள்ளார்.
-
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications