காங்கிரஸ் கட்சி 294 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. மேற்கு வங்கத்தில் கூட்டணி இல்லை.. அதிரடி முடிவு
டெல்லி: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் இடது முன்னணியுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சி உறுதிப்படுத்தி உள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் இடம்பெற்ற இடது முன்னணி என மும்முனை போட்டி நிலவியது. இடது முன்னணியுடன் கூட்டணி அமைத்திருந்த காங்கிரஸ் கட்சி 91 இடங்களில் போட்டியிட்டது. அதில் அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

5 மாநில சட்டசபை தேர்தல்
இந்திய தேர்தல் ஆணைய வட்டார தகவல்களின் படி, தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி மார்ச் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. தேர்தல் ஆணையமும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடித்து, களப்பணிகளில் இறங்கி உள்ளது.
தேர்தல் ஆணையம் தீவிரம்
தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இருக்கும் அதே வேளையில், தேர்தல் ஆணையமும் பல்வேறு ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு உள்ளது. எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவடைந்து உள்ளன. தற்போது, அசாம் தவிர்த்து தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகளின் ஆய்வுப் பணிகள் நிறைவடைந்ததும், மேற்குறிப்பிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை மார்ச் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும். எனவே, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் தேதியும் மார்ச் மாதம் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கூட்டம்
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் அவரது இல்லத்தில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல்களுக்கான உத்திகள் குறித்து விவாதித்த ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், குலாம் அகமது மிர் போன்ற முக்கிய பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தேர்தல் தொடர்பாக நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்திற்குப் பிறகு பேசிய மேற்கு வங்க காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் அகமது மிர், "இன்று நடந்த கூட்டத்தில் மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் தேர்தல்கள் குறித்து கட்சித் தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள், எப்படி முன்னோக்கிச் செல்வது என்பதுதான் விவாதப் பொருளாக இருந்தது. அனைத்துத் தலைவர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். அனைவரின் கருத்துக்களும் கேட்கப்பட்டன.
தனித்துப் போட்டி
இந்த முறை மேற்கு வங்கத்தில் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம் என்பதே தலைமைத்துவத்தின் நிலைப்பாடாக இருந்தது. இந்த முறை மேற்கு வங்கத்தில், மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று எங்கள் தொண்டர்களும் கட்சி உறுப்பினர்களும் விரும்புகிறார்கள். மாநிலத் தலைமை எடுத்த இந்த முடிவுக்கு தேசியத் தலைமை ஆதரவளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளிடமிருந்தும் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படும் மேற்கு வங்கத்தில், பெரும் அரசியல் போட்டி நிலவி வரும் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், பாஜக தேர்தலுக்கான தனது ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், அமைப்பு ரீதியான விஷயங்கள் மற்றும் தொகுதி சார்ந்த கவலைகள் குறித்து விவாதிப்பதற்காக, மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தாரின் டெல்லியில் உள்ள இல்லத்தில் செவ்வாய்க்கிழமை அன்று மேற்கு வங்க எம்.பி.க்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார்.
பாஜக பொறுப்பாளர்கள்
கூட்டத்திற்குப் பிறகு, பாஜக எம்.பி. ராஜு பிஸ்தா கூறுகையில், நிதின் நபின், பாஜக எம்.பி.க்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியதாகவும், அவர்களின் பிரச்சனைகள் குறித்து விவாதித்ததாகவும் தெரிவித்தார். அனைத்து எம்.பி.க்களும் தங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை முன்வைத்தனர்," என்று ராஜு பிஸ்தா செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த மாத தொடக்கத்தில், 2026 சட்டமன்றத் தேர்தல்களுக்காக அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளுக்குப் பொறுப்பாளர்களை பாஜகவின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் சமிக் பட்டாச்சார்யா நியமித்தார். பட்டாச்சார்யா 294 தொகுதிகளுக்கும் சட்டமன்றப் பொறுப்பாளர்களை அறிவித்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சுவேந்து அதிகாரி தோற்கடித்த நந்திகிராம் தொகுதிக்கு மனஷ் ராயை பாஜக பொறுப்பாளராக நியமித்துள்ளது. சிலிகுரியில் தேபாசிஷ் டே, டார்ஜிலிங்கில் பினோத் மொக்தன், மால்டாவில் சுஜித் குமார் தாஸ், ஆசன்சோல் தெற்கில் கபேரி சாட்டர்ஜி, ஆசன்சோல் வடக்கில் தயாமோய் சக்ரவர்த்தி மற்றும் கொல்கத்தா துறைமுகம் தொகுதிக்கு ஆஷிஷ் திரிவேதி ஆகியோரை பாஜக நியமித்துள்ளது.
-
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்!











Click it and Unblock the Notifications