டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த 8 வாரங்கள்.. 50% மட்டுமே விமான சேவை.. தீவிர கண்காணிப்பில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்!

Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அடுத்த 8 வாரங்களுக்கு 50 சதவிகிதம் விமான சேவையை மட்டுமே இயக்க டிஜிசிஏ அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த மே 4ம் தேதி சென்னை முதல் துர்காபூர் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், வானில் பறந்துகொண்டிருந்த போது ஆயில் ஃபில்டர் பிரச்னைக் காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதேபோல் மே 28ம் தேதி மும்பை முதல் கோரக்பூர் சென்ற விமானம், 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

18 நாட்களில் 8 சம்பவங்கள்..ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நோட்டீஸ்..விமான போக்குவரத்து ஆணையரகம் நடவடிக்கை18 நாட்களில் 8 சம்பவங்கள்..ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நோட்டீஸ்..விமான போக்குவரத்து ஆணையரகம் நடவடிக்கை

8 சம்பவங்கள்

8 சம்பவங்கள்

இதேபோல் ஜூன் மாதத்தில் இரு முறையும், ஜூலை மாதத்தில் 3 முறையில் விமானம் பறந்தபோது தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது. அதிலும் ஜூலை 5ம் தேதி ஒரே நாளில், டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து குஜராத்தில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 18 நாட்களில் 8 சம்பவங்கள் ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் நிகழ்ந்துள்ளது.

நோட்டீஸ்

நோட்டீஸ்

இதனால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு, விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், ஸ்பைஸ்ஜெட் விமானம் அடிக்கடி தொழிற்நுட்ப கோளாறு காரணமாக பாதுகாப்பின்றி மீண்டும் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.

டிஜிசிஏ

டிஜிசிஏ

அதுமட்டுமின்றி விமான போக்குவரத்து ஆணையரகம் தரப்பில், மோசமான பாதுகாப்பு மேற்பார்வை மற்றும் போதிய பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததே விமானத்தில் கோளாறு ஏற்படுவதற்கு காரணமாக பார்க்கிறோம். கடந்த 3 ஆண்டுகளாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதையும் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம் சார்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு புதியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அடுத்த 8 வாரங்களுக்கு 50 சதவிகித விமான சேவையை மட்டுமே இயக்க அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு

கண்காணிப்பு

இதுகுறித்து டிஜிசிஏ கூறுகையில், டிஜிசிஏ நோட்டீஸ்-ற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சார்பாக காசோலைகள், ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதேபோல் பாதுகாப்பான மற்றும் நம்பகமான போக்குவரத்து சேவையை தொடர்ந்து வழங்குவதற்காக, ஸ்பைஸ்ஜெட் விமான சேவை எண்ணிக்கை 50 சதவிகிதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 8 வாரங்களும் விமான நிறுவனத்தின் சேவைகள் தீவிர கண்காணிப்புக்கு உட்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Aviation regulator DGCA ordered SpiceJet to operate maximum 50 per cent of its flights, which were approved for summer schedule, for a period of eight weeks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X