திமுக தொகுதி பங்கீட்டை உடனே முடித்தால் நல்லது.. ராகுலுடன் ஆலோசித்த பின் செல்வப்பெருந்தகை பேட்டி!
டெல்லி: திமுக - காங்கிரஸ் இடையில் எந்த அதிருப்தியும் இல்லை.. ஆனால் தொகுதி பங்கீட்டை உடனடியாக முடித்தால் நல்லது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்திய தகவல்களை நாளையே முதல்வர் ஸ்டாலினிடம் கூற உள்ளதாக கூறிய செல்வப்பெருந்தகை, திமுக உடனடியாக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிட்ட சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக மாவட்டத் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்த 74 மாவட்டத் தலைவர்களுடன் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் ஆலோசனை நடத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சியின் சீனியர் நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் உடனிருந்தனர்.

ராகுல் காந்தி ஆலோசனை
காங்கிரஸ் தரப்பில் டிசம்பர் மாதமே கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்ட சூழலில், முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக அந்தக் குழு சந்தித்தது. சுமார் 2 மாதங்களாகிவிட்ட சூழலில், திமுக தரப்பில் இன்னும் பேச்சுவார்த்தைக் குழுவே அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் ராகுல் காந்தி உடனான சந்திப்புக்கு பின் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.
செல்வப்பெருந்தகை பேட்டி
அப்போது செல்வப்பெருந்தகை பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டது. தேர்தலில் கடினமாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அதேபோல் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அனைவரும் இன்று திமுக பேச்சுவார்த்தைக் குழு அமைக்கவில்லை என்று மட்டுமே வருத்தப்பட்டு பகிர்ந்து கொண்டனர்.
சங்கடங்கள் இருக்கு
கடைசி நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வை நடத்துவது தேவையில்லாத ஒன்று. காங்கிரஸ் கட்சிக்கு நிறைய படிப்பினை உள்ளது. கடைசி நேரத்தில் எதுவும் செய்ய முடியாது. அதனால் முன்னதாக தொகுதிகள் பங்கீட்டை முடித்து 234 தொகுதிகளிலும் பணியாற்றுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்றனர். அதில் சில சங்கடங்கள் இருப்பதாக பலரும் கூறினர்.
காங்கிரஸ் கோரிக்கை
அதனை கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளோம். முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்க வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் கோரிக்கை ஆகும். தேர்தல் களத்தில் நிற்க வேண்டும் என்று நினைக்கிறோம். உள்ளே பேசும் எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாது. திமுக உடன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை.
திமுக மீது அதிருப்தியா?
ராகுல் காந்தியுடன் நடந்த ஆலோசனை தொடர்பான கருத்துக்களை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூறவுள்ளேன். காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு தயாராக உள்ளது. ராகுல் காந்தி பிரச்சாரம், மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம் எல்லாமே ரெடியாக உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், யாருக்கும் தெரியாது. காங்கிரஸ் கட்சியில் யாரிடமும் அதிருப்தி இல்லை.. ஆனால் விரைவில் தொகுதி பங்கீட்டை முடிப்பது நல்லது என்று தெரிவித்துள்ளார்.
-
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு












Click it and Unblock the Notifications