Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

55 தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது- லோக்சபாவில் திமுக, விசிக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கை கடற்படையால் 55 தமிழக மீனவர்கள் 8 படகுகளுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து லோக்சபாவில் விவாதிக்க கோரி திமுகவின் டி.ஆர்.பாலு, விசிகவின் ரவிக்குமார் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படையானது, பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை 8 படகுகளுடன் திடீரென கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் கோரிக்கை

தமிழகத்தின் கோரிக்கை

55 மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்பது அனைவரது கோரிக்கை. மேலும் மீனவர்கள் கைது குறித்து இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பதும் தமிழகத்தின் கோரிக்கை.

விவாதிக்க கோரி நோட்டீஸ்

விவாதிக்க கோரி நோட்டீஸ்

இது தொடர்பாக லோக்சபாவில் விவாதிக்க வலியுறுத்தி திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ரவிக்குமார் எம்.பி. தமது ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸில் கூறியிருப்பதாவது: 2021 டிசம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை 55 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு 8 படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. 2021-ம் ஆண்டில் மட்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் 19 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். பல்வேறு சம்பவங்களில் பல படகுகள் அழிக்கப்பட்டு 5 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 73 படகுகளை இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.

மத்திய அரசின் பாரபட்சம்

மத்திய அரசின் பாரபட்சம்

2021 நவம்பரில் குஜராத் கடற்கரை அருகே பாகிஸ்தான் கடற்படையால் (பிஎம்எஸ்ஏ) இந்திய மீனவர் ஒருவர் கொல்லப்பட்டபோது, ​​பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி கண்டனம் தெரிவித்தது. ஆனால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போது ஒன்றிய அரசு அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்த பாரபட்சமான அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்.

கண்டனம் தெரிவிக்க வேண்டும்

கண்டனம் தெரிவிக்க வேண்டும்

இந்திய ஒன்றிய அரசு இலங்கைத் தூதரை அழைத்துத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். மக்களவையில் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+