டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடந்த 5 ஆண்டுகளில் 36 பயணங்கள்.. பிரதமர் மோடியின் வெளிநாடு பயணத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் 36 நாடுகளுக்கு அரசுமுறைப்பயணமாக சென்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வெளிநாட்டு பயணங்களால் நட்புறவு நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுப்பெற்றதாகவும் மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு பயணம் செல்வதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் முக்கிய விமர்சனங்களில் ஒன்றாக உள்ளது.

ஆனால், பிரதமர் மோடியின் ராஜாங்க ரீதியிலான பயணங்கள் மூலமாக இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்து இருப்பதாகவும் முக்கிய அலுவல் பயணமாகவே பிரதமர் மோடி சென்று வருவதாகவும் மத்திய அரசு பதிலடி கொடுத்து வருகிறது.

ஒரே முட்டுக்கட்டை.. ஓபிஎஸ்சுக்கு எதிராக இடைக்கால உத்தரவு வேண்டும்.. எடப்பாடி உச்சநீதிமன்றத்தில் மனு ஒரே முட்டுக்கட்டை.. ஓபிஎஸ்சுக்கு எதிராக இடைக்கால உத்தரவு வேண்டும்.. எடப்பாடி உச்சநீதிமன்றத்தில் மனு

வெளிநாட்டு பயணத்திற்கான மொத்த செலவு

வெளிநாட்டு பயணத்திற்கான மொத்த செலவு

இந்த நிலையில், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கு செலவிடப்பட்ட தொகை குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளிதரன் கூறியதாவது: பிரதமர் மோடி சமீபத்தில் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்திற்கான மொத்த செலவு ரூ.32 லட்சத்து 09 ஆயிரத்து 760 ஆக உள்ளது.

36 நாடுகளுக்கு பயணம்

36 நாடுகளுக்கு பயணம்

பிரதமர் மோடியின் செப்டம்பர் 26-28 வரை ஜப்பான் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்திற்கு 23 லட்சத்து 86 ஆயிரத்து 536- செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்களுக்காக மொத்தம் 239 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்க பயணத்திற்கு ரூ.23 கோடி செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 36 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்" என்றார்.

வலுப்படுத்த உதவியது

வலுப்படுத்த உதவியது

பிரதமர் மோடியின் இந்த வெளிநாட்டு பயணத்தால் இந்தியா தனது நட்பு நாடுகளுடன் உறவை வலுப்படுத்தியாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:- பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நட்பு நாடுகளுடான உறவை இந்தியா வலுப்படுத்த உதவியது. தேசிய நலன்கள்,வெளிநாட்டு கொள்கைகளை பூர்த்தி செய்ய பிரதமரின் இந்த பயணம் முக்கியமானதாக அமைந்தது.

இந்தியாவின் கண்ணோட்டத்தை..

இந்தியாவின் கண்ணோட்டத்தை..

பருவநிலை மாறுபாடு, பயங்கரவாதம், சைபர் பாதுகாப்பு உள்பட பலதரப்பு விவகாரங்களில் இந்தியாவின் கண்ணோட்டத்தை உலக அளவில் எடுத்து வைக்கவும் முன்வைக்கவும் பிரதமர் மோடியின் பயணங்கள் உதவிகரமாக அமைந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 17 நாள்கள் அலுவல்கள் நடைபெறுகின்றன. குளிர் கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

English summary
The central government has informed that Prime Minister Modi has visited 36 countries on official visits in the last 5 years. The Union Government also said in the Rajya Sabha that India's relations with friendly countries have been strengthened by these foreign trips.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X